தூய தமிழ் ஊடக விருது

தூய தமிழ் ஊடக விருது தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் கீழாகச் செயல்பட்டு வரும் செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககத்தின் வழியாகத் தூய தமிழைப் பயன்படுத்தும் காட்சி மற்றும் அச்சு ஊடகங்களை ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் தமிழ் அகராதியியல் நாள் விழாவில் வழங்கப்படுகிறது. காட்சி ஊடகம் ஒன்றிற்கும், அச்சு ஊடகம் ஒன்றுக்குமென்று வழங்கப்படும் இந்த விருதுக்கான பாராட்டுச் சான்றிதழுடன், பரிசுத்தொகையாக ரூபாய் 50,000/- வழங்கத் தமிழ்நாடு அரசாணை வெளியிடப்பட்டிருக்கிறது.[1]

தூயதமிழ் ஊடக விருது பெற்றோர்

ஆண்டு அச்சு ஊடகம் காட்சி ஊடகம்
2020 வெல்லும் தூயதமிழ் (மாத இதழ்) மக்கள் தொலைக்காட்சி[1]
2021 அறிவியல் ஒளி (திங்களிதழ்),
நா.சு. சிதம்பரம்
இணையம் (வலையொளி),
முனைவர் மு. இளங்கோவன்[2] [3]
2022 தென்மொழி (திங்களிதழ்),
மா.பூங்குன்றன் [4] [5]
-----


மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=தூய_தமிழ்_ஊடக_விருது&oldid=19279" இருந்து மீள்விக்கப்பட்டது