தூது (சிற்றிதழ்)

தூது கிழக்கிலங்கை கல்முனையிலிருந்து 1983ம் ஆண்டில் வெளிவந்த ஒரு மாத இதழாகும். தூது என்ற பெயரில் இலங்கை, இந்தியாவிலிருந்து அவ்வப்போது சில இதழ்கள் வெளிவந்துள்ளன.

ஆசிரியர்

  • நௌசாத்

வெளியீடு

  • புதுமை கலை இலக்கிய வட்டம்

உள்ளடக்கம்

இவ்விதழில் புதிய இலக்கியவாதிகளை ஊக்குவிக்கத்தக்க வகையில் பல புதிய எழுத்தாளர்களின் இலக்கிய ஆக்கங்கள் இடம்பெற்றிருந்தன. அத்துடன், மூத்த எழுத்தாளர்களின் கதை, கவிதைகளும் இடம்பெற்றிருந்தன. ஆரம்ப எழுத்தாளர்களை அறிமுகப்படுத்துதில் கூடிய ஆர்வம் கொண்டிருந்தது.

ஆதாரம்

  • இலங்கையில் இஸ்லாமிய இதழியல் வரலாறு - புன்னியாமீன்
"https://tamilar.wiki/index.php?title=தூது_(சிற்றிதழ்)&oldid=14747" இருந்து மீள்விக்கப்பட்டது