தூண்டில் (திரைப்படம்)

தூண்டில் என்பது 2008ஆம் ஆண்டில் கே. எஸ். அதியமான் இயக்கத்தில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் சாம், சந்தியா, திவ்யா ஸ்பந்தனா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.[1] இத்திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியைப் பெறவில்லை

தூண்டில்
இயக்கம்கே. எஸ். அதியமான்
தயாரிப்புஎம். ராஜ்குமார்
எஸ். எஸ். ஆர். தில்லைநாதன்
பி. காந்தீபன்
கதைகே. எஸ். அதியமான் (வசனம்)
திரைக்கதைகே. எஸ். அதியமான்
இசைஅபிசேக் ராய்
நடிப்புசாம்
சந்தியா
திவ்யா ஸ்பந்தனா
விவேக்
ரேவதி
ஆர்கே
ஒளிப்பதிவுடி. கவியரசு
படத்தொகுப்புவி. எம். உதயசங்கர்
வெளியீடுபெப்ரவரி 22, 2008 (2008-02-22)
நாடு இந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

கதைச்சுருக்கம்

லண்டனில் வசிக்கின்றனர் தமிழகத்தைச் சேர்ந்த ஷாம்-சந்தியா தம்பதியினர். இவர்களுக்கு வாடகைத்தாய் மூலம் பெண்குழந்தை கிடைக்கப் பெறுகிறது. குழந்தை வளர்கிறது. ஒருநாள் குழந்தை காணாமல் போக,ஷாம்-சந்தியா தவிக்கின்றனர். அப்போது திவ்யா குழந்தையைக் கொண்டுவந்து ஒப்படைக்கிறாள். திவ்யாவும் ஷாமும் முன்னாள் காதலர்கள் என சந்தியாவிடம் தெரிவிக்கிறாள் திவ்யா. தன்னைக் காதலித்து கைவிட்ட ஷாமை பழிவாங்கவே திவ்யா குழந்தையைக் கடத்தியிருக்கிறாள். இறுதியில் தனது எண்ணம் தவறு என்றும் தன் வாழ்வை நாசமானதற்கு காரணம் ஆர்.கே. தான் என்பதை அறிந்து ஆர்.கே.வை துப்பாக்கியால் சுட்டுக் கொல்கிறாள் திவ்யா. ஷாம்-சந்தியாவிடம் குழந்தையை ஒப்படைக்கின்றாள் திவ்யா [2]

மேற்கோள்கள்

  1. "திரைப்படம்.காம்" இம் மூலத்தில் இருந்து 2016-03-12 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160312054153/http://www.thiraipadam.com/cgi-bin/movie.pl?id=700&lang=tamil. 
  2. தூண்டில் தமிழ்த் திரைப்படம்

வெளியிணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=தூண்டில்_(திரைப்படம்)&oldid=34274" இருந்து மீள்விக்கப்பட்டது