துளசி மனோகரன்

துளசி மனோகரன் எனும் துளசி திவானி மனோகரன் (ஆங்கிலம்: Thulsi Thivani Manogaran; சீனம்: 图尔西·马诺加兰) என்பவர் மலேசிய இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அரசியல்வாதி; மனித உரிமை செயற்பாட்டாளர்; மற்றும் பேராக் மாநில சட்டமன்றத்தின் புந்தோங் தொகுதி உறுப்பினரும் ஆவார்.[2]

மாண்புமிகு புவான்
துளசி மனோகரன்
YB Thulsi Manogaran
பேராக் மாநில சட்டமன்றம்
புந்தோங் சட்டமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
3 டிசம்பர் 2022 முதல்
அரசர் நசுரின் சா
முன்னவர் சிவசுப்ரமணியம் ஆதி நாராயணன்
DAP-Logo.png ஜசெக
தொகுதி புந்தோங் சட்டமன்றத் தொகுதி
பெரும்பான்மை 19,155 (2022)
வாக்காளர்கள்: 25,761
மலேசிய கல்வி அமைச்சு சிறப்பு அதிகாரி
பதவியில்
2018 – 2022
Pakatan Harapan Logo.svg.png பாக்காத்தான் அரப்பான் நிர்வாகம்
தனிநபர் தகவல்
பிறப்பு துளசி திவானி மனோகரன்
(Thulsi Thivani Manogaran)

1988
தெலுக் இந்தான், பேராக், மலேசியா
குடியுரிமை மலேசியர்
அரசியல் கட்சி DAP-Logo.png ஜசெக
Pakatan Harapan Logo.svg.png பாக்காத்தான் அரப்பான் (PH)
(2012 முதல்)
வாழ்க்கை துணைவர்(கள்) திருமணம் ஆகவில்லை
இருப்பிடம் ஈப்போ, பேராக்
படித்த கல்வி நிறுவனங்கள் புக்கிட் நானாஸ் கான்வென்ட், கோலாலம்பூர்;
மலாயா பல்கலைக்கழகம்
இளங்கலை சட்டம்[1]
பணி அரசியல்வாதி
தொழில் வழக்கறிஞர்
இணையம் https://www.thulsi.my/

2022-ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலில், 25,761 வாக்காளர்களைக் கொண்ட புந்தோங் சட்டமன்றத் தொகுதியில், 19,155 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார்.

இவர் பாக்காத்தான் அரப்பான் (PH) கூட்டணியின் ஓர் உறுப்புக் கட்சியான ஜனநாயக செயல் கட்சியின் (Democratic Action Party) (DAP) உறுப்பினர்; மற்றும் தெலுக் இந்தான் மக்களவைத் தொகுதியின் முன்னாள் மக்களவை உறுப்பினர் மனோகரன் மாரிமுத்து என்பவரின் மூத்த புதல்வியும் ஆவார்.[3][4]

பொது

கோலாலம்பூர் புக்கிட் நானாஸ் கான்வென்ட் இடைநிலைப் பள்ளியில் தன் இடைநிலைக் கல்வியை முடித்த இவர் மலாயா பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை நிறைவு செய்து ஒரு வழக்கறிஞரானார்.[5]

நான்கு ஆண்டுகளுக்கும் மேல் வழக்கறிஞர் தொழில் புரிந்த துளசி, 2018-ஆம் ஆண்டில், பாக்காத்தான் அரப்பான் அரசாங்கத்தின் மலேசிய கல்வி அமைச்சில் துணையமைச்சராக இருந்த தியோ நீ சிங் என்பவருக்குச் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டார். அந்தப் பதவியில் இவர் 2020-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரையில் ஏறக்குறைய 22 மாதங்கள் சேவை செய்துள்ளார்.[1]

புந்தோங் தொகுதி

அந்தக் காலக் கட்டத்தில் இவர் பல்வேறு மனித உரிமை அமைப்புகளுடன் மனித உரிமை செயற்பாட்டாளராகச் செயலாற்றி உள்ளார். கடந்த 10 ஆண்டுகளாக பகாங், சிலாங்கூர் மற்றும் பேராக் ஆகிய 3 மாநிலங்களிலும் ஜனநாயக செயல் கட்சியின் சார்பில் பல நிகழ்ச்சிகளில் தீவிரமாகப் பங்கேற்று சேவையாற்றினார். அத்துடன் கடந்த 2021-ஆம் ஆண்டு மெழுகுவர்த்தி ஏந்தி அமைதிப் போராட்டத்தில் பங்கேற்றதற்காக இவர் சிறையில் தள்ளப்பட்டார்.[6]

இவரின் ஆற்றலைக் கவனித்த ஜனநாயக செயல் கட்சியின் தலைமைத்துவம், 2022 பொதுத் தேர்தலில் புந்தோங் தொகுதியில் போட்டியிட இவருக்கு வாய்ப்பளித்தது.[1]

சேவைகள்

ஈப்போவில், வழக்கறிஞர்கள் சிலரின் ஆதரவோடு இலவசச் சட்டத்துறைச் சேவைகளை வழங்குவதற்கு நான்கு முகாம்களை நடத்தியுள்ளார். அந்த முகாம்களின் வழி 70-கும் மேற்பட்ட குடும்பங்களின் சட்டச் சிக்கல்களுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளதாகவும் அறியப்படுகிறது.

பிறப்புப் பத்திரங்கள் இல்லாமல் அவதிப்படும் மலேசிய இந்தியர்களுக்கு இயன்ற அளவிற்கு அந்தப் பத்திரங்களை முறையாகப் பெறுவதற்கு நடவடிக்கைகள் எடுத்து வரும் இவர், பல நிலைகளில் மலிந்து கிடக்கும் இனத் துவேசத்தைக் களைவதற்கும் முயற்சிகள் செய்து வருகிறார்.[7]

புந்தோங் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்




 

2022-இல் புந்தோங் சட்டமன்றத் தொகுதியின் வாக்காளர் இனப் பிரிவுகள்:[8][9]

  மலாயர் (5.78%)
  சீனர் (41.5%)
  இதர இனத்தவர் (0.71%)
மலேசியப் பொதுத் தேர்தல் 2022
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ∆%
பாக்காத்தான் அரப்பான் துளசி திவானி மனோகரன்
(Thulsi Thivani Manogaran)
21,412 84.02% + 0.28%  
பாரிசான் நேசனல் ஜெயகோபி சுப்ரமணியம்
(Jayagopi Subramaniam)
2,257 8.86% + 3.61%  
பெரிக்காத்தான் நேசனல் சிவசுப்ரமணியம் ஆதி நாராயணன்
(Sivasubramaniam Athinarayanan)
1,437 5.64% + 5.64%  
சுயேச்சை இருதயம் செபஸ்தியர் அந்தோனிசாமி
(Iruthiyam Sebastiar Anthonisamy)
237 0.93% + 0.93%  
சுயேச்சை முகமது பைஸ் அப்துல்லா
(Muhammad Faiz Abdullah)
140 0.55% + 0.55%  
செல்லுபடி வாக்குகள் (Valid) 25,483 100%
செல்லாத வாக்குகள் (Rejected) 277
ஒப்படைக்காத வாக்குகள் (Unreturned) 62
வாக்களித்தவர்கள் (Turnout) 25,822 70.33% - 0.94%  
பதிவு பெற்ற வாக்காளர்கள் (Registered Electors) 36,714
பெரும்பான்மை (Majority) 19,155 75.96% + 4.69%  
பாக்காத்தான் அரப்பான் வெற்றி பெற்ற கட்சி (Hold)
சான்றுகள்: மலேசிய தேர்தல் ஆணையம்[10]

மேற்கோள்கள்

மேலும் காண்க

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=துளசி_மனோகரன்&oldid=25093" இருந்து மீள்விக்கப்பட்டது