துருவத் துளிகள்

எழுத்தாளரின் தொகுப்பில் வராத சில கவிதைகள்.

துருவத் துளிகள்
துருவத் துளிகள்
நூலாசிரியர் இ. தியாகலிங்கம்
பதிப்பாசிரியர் ச.பொன்னுத்தரை
முதற் பதிப்பு
உண்மையான
தலைப்பு
துருவத் துளிகள்
செயற்பாட்டிலுள்ள
தலைப்பு
துருவத் துளிகள்
நாடு நோர்வே
மொழி தமிழ்
வெளியீட்டு
எண்
1
பொருண்மை பல
வகை கவிதை
வெளியிடப்பட்டது 2009
முதலாவது பதிப்பு
ஊடக
வகை
புத்தகம்
பன்னாட்டுத்
தரப்புத்தக
எண்
978-81-89748-79-1


இன்னும் சில பயித்தியங்கள்…

இன்னும் சில பயித்தியங்கள்
இறந்து போன கனவுகளில்
இன்றைய அவர்கள் ஆதங்கம்
மனதில் ஊறவைக்கும் பரிதாபம்
இனி விதி செய்வதற்கு
எவருக்கும் இடம் இல்லாத
எம் வரலாறு.
அவர்களால் இடப்பட்ட முற்றுப்புள்ளி
ஏன் அவர்கள் பக்கங்களில் பதியவில்லை?

கடவுள்

கடவுள் என்பவர் என்
கனவில் வந்தார்.

என்னை நம்புகிறாயா
என்றொரு
கேள்வி கேட்டார்.

இல்லையே இறைவா
எதற்காக உன்னை நான்
நம்பவேண்டும் என்றேன்.

நான் கடவுள் என்றார்.

நீ கனவில் மட்டும்
வருபவர்தானே என்றேன்.

நிஜத்தில் நான்
வரமுடியாது என்றார்.

ஏன் என்றேன்.

மௌனமாய் இருந்தவர்
மனிதரைப் பற்றிய
உன் எண்ணம் என்ன என்றார்.

மனசாட்சியற்றவர்கள்
உன்னை மனமுருக வேண்டுவதாய்
நித்தமும் நடிப்பவர்கள் என்றேன்.

மனிதனான உனக்கே
புரிந்தபோது நான்
என்ன செய்வது என்றார்.

நீ இறைவன்.
தூணிலும் இருப்பாய்
துரும்பிலும் இருப்பாய் என்றேன்.

சுத்தமாய் இருந்தால்
மட்டும் நான் அங்கு இருப்பேன்.
மனிதர்களில் நான்
எப்படி இருப்பேன் என்றார்.

எல்லாம் அறிந்த உன்னால்
ஏன் இருக்கமுடியாது
அவர்கள் உள்ளத்தில் என்றேன்.

மூடனே அவர்கள்
அசுத்தப்பட்டவர்கள்.
கரங்களிலே சிசுக்களின்
குருதி படிந்தவர்கள் என்றார்.

முற்றும் அறிந்த இறைவா
நீ மூடனா என்ன என்றேன்.

ஏன் அப்படிப் பேசுகிறாய் என்றார்.

ஒரு நாஸ்தீகனிடம் வந்து
ஆஸ்திகம் பேசுகிறீரே என்றேன்.

நான் நாஸ்தீகனிடம் வரவில்லை
மனசாட்சி உள்ள
மனிதனைத் தேடினேன்.
மானிடா உன்னைக்
கண்டுகொண்டேன் என்றார்.

உன் படிகளிலும் பாதங்களிலும்
இருப்பவர்கள் என்றேன்.

உள்ளொன்று வைத்து
புறம் ஒன்று பேசுகிறார்கள்
மனிதா என்றார்.

உன்னடி வந்த எம்முறவுகள்
எங்கே என்றேன்.

ஒருபகுதி சுவர்க்கத்திற்கு
மறுபகுதி நரகத்திற்கு என்றார்.

அயல்நாட்டில் வாழும் எம்முறவுகள்
வந்தால் என்ன செய்வாய்
என்றேன்.

தெரிந்து கொண்டே
கேட்காதே மனிதா என்றார்.

நான் உன்னுலகிற்கு வந்தால்
எனக்கு நரகமா தருவாய் என்றேன்.

இல்லை சுவர்க்கம் என்றார்.

என்ன நாஸ்தீகனுக்கு
சுவர்க்கமா என்றேன்.

நான் தண்டனைகளை
நம்பிக்கை பார்த்துக் கொடுப்பதில்லை.
அவரவர் செய்த வினைகளைப்
பார்த்துக் கொடுப்பவன் என்றார்.

மனசாட்சி அற்ற
மனிதர்களைவிட
நாஸ்தீகம் பேசும் நீ
மேலானவன் என்றார்.

மனிதனே தன்னைக் கடவுள்
என்கிறானே
நீங்கள் என்ன செய்யப்
போகிறீர்கள் என்றேன்.

நீ கடவுள் இல்லை என
மறுப்பது என்னைப் பார்க்க
முடியவில்லை என்பதால்.
அவன் தானே கடவுள் என்பது
என்னையே ஏமாற்றுவது என்றார்.

உன்னை மன்னிக்கலாம்
ஆனால் அவர்கள்…
வரட்டும் என் இராசியத்திற்கு
இறைவனே கறுவிக் கொண்டார்.

"https://tamilar.wiki/index.php?title=துருவத்_துளிகள்&oldid=29187" இருந்து மீள்விக்கப்பட்டது