தீயனூர் ஜமதக்னீஸ்வரர் கோயில்

தீயனூர் ஜமதக்னீஸ்வரர் திருக்கோயில் அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டத்தில் அமைந்துள்ள சிவபெருமான் திருக்கோயில் ஆகும். பழைமையான தேவார வைப்புத் தலம். [கு 1]

தேவார வைப்புத் தலம்
தீயனூர் ஜமதக்னீஸ்வரர் திருக்கோயில்[1]
பெயர்
புராண பெயர்(கள்):தீயனூர், அக்னீச்சுரம் , மனுகுலகேசரிநல்லூர், சோழ கேரள நல்லூர், வானவன்தேவி சதுர்வேதி மங்கலம்[1]
பெயர்:தீயனூர் ஜமதக்னீஸ்வரர் திருக்கோயில்[1]
அமைவிடம்
ஊர்:தீயனூர் (உடையவர் தீயனூர்)
மாவட்டம்:அரியலூர்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:ஜமதக்னீஸ்வரர்
தாயார்:அமிர்தாம்பிகை
தல விருட்சம்:வில்வம்
தீர்த்தம்:அக்னி தீர்த்தம்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கல்வெட்டுகள்:பல கல்வெட்டுகள்
தேவார வைப்புத் தலப்பாடல் பாடியவர்கள்:அப்பர்

தலவரலாறு

பரசுராமரின் தந்தையான ஜமதக்னி முனிவர் வில்வ மரங்கள் நிறைந்து வில்வ வனமாக இருந்த இப்பகுதியில் வந்து சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்தார். இதனால் இத்தல சிவபெருமான் ஜமதக்னீஸ்வரர் என்றழைக்கப்பட்டார்.[1]

கல்வெட்டுகள் மூலம் வரலாறு

கங்கைகொண்ட சோழபுரம் அமைத்த முதலாம் ராஜேந்திர சோழனின் மூத்த மகன் முதலாம் ராஜாதி ராஜன் (1018-1053) ஆட்சிகால கல்வெட்டுகளில் இந்த ஊரின் வரலாற்றுச் சிறப்புகள் குறிப்பிடப்பட்டுள்ளன. அரண்மனைகள், அன்னதானக் கூடங்கள் என இவ்வூர் மிகப்பெரிய நகராக அமைந்திருந்ததை கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.[1]

கும்பாபிஷேகம்

இந்து சமய அறநிலையத் துறையால் நிர்வாகிக்கப்படும் இத்திருக்கோயிலில் 22.05.1968 ஆம் வருடமும் 42 வருடங்களுக்குப் பின்னர் ஊர்மக்கள் மற்றும் வெளியூர் பக்தர்கள் உதவியுடன் மதில்சுவர்கள் பராமரிப்பு பணிகள் முடியுமுன்னர் 8.5.2011 ஞாயிற்றுக்கிழமையும் கும்பாபிஷேகம் நடைபெற்றது.[2]

புதிய பைரவர்

இத்திருக்கோயில் முன்பு கவனிப்பாரற்று போக ஆரம்பிக்க இருந்த காலகட்டத்தில் இருந்து வந்த காலபைரவர் சிலை தற்போது காணப்படாததால் 2011 வருட கும்பாபிஷேக சமயம் புதிய பைரவர் சிலை அமைக்கப்பட்டது. பழைமையான காலபைரவர் சிலை திருடப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகின்றது.[2]

குறிப்புகள்

  1. பு.மா.ஜெயசெந்தில்நாதன் நூலில் (தேவார வைப்புத் தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை) உள்ள 147 தலங்களின் பெயர்களைக் கொண்ட பட்டியலில் இத்தலத்தின் பெயர் காணப்படவில்லை. இது தேவார வைப்புத்தலமா என்பது உறுதி செய்யப்படவேண்டியுள்ளது.

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 1.3 குமுதம் ஜோதிடம்; 20.05.2011;தீவினைகள் தீர்க்கும் தீயனூர் ஜமதக்னீஸ்வரர்; பக்கம் 2-4
  2. 2.0 2.1 குமுதம் ஜோதிடம்; 20.05.2011; பக்கம் 4