தி. ந. இராமச்சந்திரன்
முனைவர் தில்லை நடராஜன் இராமச்சந்திரன் (T. N. Ramachandran; 18 ஆகத்து 1934 - 6 ஏப்ரல் 2021) தமிழிலும் ஆங்கிலத்திலும் புலமை பெற்றவர். சிறந்த மொழிபெயர்ப்பாளர். தமிழ் சைவம் குறித்தும் சைவ சித்தாந்தம் குறித்தும் பல நூல்களை எழுதியவர். சேக்கிழார் அடிப்பொடி எனும் சிறப்பு பட்டத்தைப் பெற்றவர்.[1]
தில்லை நடராஜன் இராமச்சந்திரன் | |
---|---|
பிறப்பு | டி. என். இராமச்சந்திரன் 18 ஆகத்து 1934 சிதம்பரம் |
இறப்பு | ஏப்ரல் 6, 2021 | (அகவை 86)
தேசியம் | இந்தியர் |
மற்ற பெயர்கள் | சேக்கிழார் அடிப்பொடி |
பணி | ஆன்மீக எழுத்தாளர், பேச்சாளர் |
அறியப்படுவது | சைவம், சைவ சித்தாந்தம் |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | 2 & 7ம் திருமுறை விளக்க உரை |
வலைத்தளம் | |
http://drtnr.org/ |
சைவத் தமிழ் திருத்தொண்டர்களின் வாழ்க்கை வரலாற்றியல் இலக்கியமான சேக்கிழாரின் பெரியபுராணம், சைவ சித்தாந்தம் ஆகியவை குறித்து தமிழிலும், ஆங்கிலத்திலும் பல நூல்களை எழுதியவர்.[2]
இளமை
தில்லை நடராஜன் – காமாட்சியம்மாள் இணையருக்கு 18 ஆகஸ்டு 1934ல் பிறந்த இராமச்சந்திரன், சட்டக் கல்வி பயின்று 9 ஆகஸ்டு 1956 முதல் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றினார். 13 செப்டம்பர் 1956ல் கல்யாணி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
விருதுகள்
- மகாகவி பாரதியாரின் நூற்றாண்டு விழாவின் போது தி. ந. இராமச்சந்திரன் சிறப்பு செய்யப்பட்டார். 1984ல் இராமச்சந்திரனின் சைவப் பணியைப் பாராடி தருமபுர ஆதீனம் சைவ சித்தாந்த கலாநிதி பட்டத்தை வழங்கியது.
- இராமச்சந்திரனின் தமிழ் இலக்கியத்திற்கான பணியைப் பாராட்டி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் 6 அக்டோபர் 2011ல் தமிழ் இலக்கியத்திற்கான முனைவர் பட்டம் வழங்கியது.
- தி. ந. இராமச்சந்திரன், தெய்வச் சேக்கிழாரின் பெரியபுராணம் குறித்து தொடர் சொற்பொழிவுகள் ஆற்றியதால், சேக்கிழார் அடிப்பொடி எனும் பாராட்டைப் பெற்றார்.
படைப்புகள்
தி. ந. இராமச்சந்திரன் தமிழிலும், ஆங்கிலத்திலும் பல சைவத் தமிழ் நூல்களை இயற்றியுள்ளார். அவைகளில் சில: [3]
- பெரியபுராணம் திருமுறைகளின் கவசம்[4]
- பாரதி பாடல்கள் சிந்தனை விளக்கம்
- Tirumurai the Second
- Tirumurai The Seventh
- SAYINGS
- UTTERANCES
- Kaivalya Navaneetham
- Brahmmasuthra Siva Advaitha
- Chitrakavi Maalai
- Max Mullar