திரையின் மறுபக்கம்

திரையின் மறுபக்கம் என்பது 2023 இல் வெளியான இந்தியத் தமிழ் குற்ற அதிரடித் திரைப்படமாகும்.[1] இப்படத்தை நிதின் சாம்சன் இயக்கியிருந்தார். நிதின் சாம்சன் தயாரித்திருந்தார். இப்படத்தில் முகமது கோஸ், ஹேமா ஜெனிலியா ஆகியோர் நடித்திருந்தனர். துணை வேடங்களில் நடராஜன் மணிகண்டன், நிதின் சாம்சன், ஸ்ரீ ரிஷா ஆகியோர் நடித்திருந்தனர். படத்தின் இசையை அனில் நலன் சக்ரவர்த்தியும் ரித்திக் மாதவனும் மேற்கொண்டனர். ஒளிப்பதிவை நிதின் சாம்சன் மேற்கொள்ள படத்தொகுப்பை நிசாந்த் சாம்சன் மேற்கொண்டார்.[2]

திரையின் மறுபக்கம்
சுவரொட்டி
இயக்கம்நிதின் சாம்சன்
தயாரிப்புநிதின் சாம்சன்
கதைநிதின் சாம்சன்
இசைஅனில் நலன் சக்கரவர்த்தி
ரித்திக் மாதவன்
நடிப்பு
  • முகமது கோஸ்
  • நடராஜன் மணிகண்டன்
  • ஹேமா ஜெனிலியா
ஒளிப்பதிவுநிதின் சாம்சன்
படத்தொகுப்புநிசாந்த் சாம்சன்
கலையகம்360 டிகிரீசு
வெளியீடு20 அக்டோபர் 2023 (2023-10-20)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

  • சத்தியமூர்த்தியாக முகமது கோஸ்
  • இயக்குனர் செந்திலாக நடராஜன் மணிகண்டன்
  • காவேரியாக ஹேமா ஜெனிலியா
  • நிதினாக நிதின் சாம்சன்
  • ஸ்ரீ ரிஷா

தயாரிப்பு

இப்படத்தின் படப்பிடிப்பு புளோரிடாவில் சில காட்சிகளுடன் சென்னை, செங்கல்பட்டில் படமாக்கப்பட்டது.[3]

வரவேற்பு

மாலை மலரின் ஒரு விமர்சகர், "திரைப்படத் துறையில் சில இடங்களில் நடக்கும் உண்மை நிலையை இப்படம் அழகாகச் சுட்டிக் காட்டியிருக்கிறது" என்று எழுதினார்."[4] தினத்தந்தி விமர்சகர், "விறுவிறுப்பான, சுவாரசியமான திரைக்கதையில் விழிப்புணர்வுப் படமாக காட்டப்பட்டுள்ளது பாராட்டத்தக்கது" என்று கூறினார்.[5]

மேற்கோள்கள்

  1. "Thiraiyin Marupakkam to Collide with Leo on October 20th". Telugu Times - USA NRI Telugu News Telugu News Papers In USA (in English). Archived from the original on 2023-10-15. பார்க்கப்பட்ட நாள் 2023-10-20.
  2. "Thiraiyin Marupakkam". The Times of India. 2023-10-17 இம் மூலத்தில் இருந்து 2023-10-17 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20231017142101/https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/previews/thiraiyin-marupakkam/articleshow/104501534.cms?from=mdr. 
  3. "Archived copy". Archived from the original on 2023-10-20. பார்க்கப்பட்ட நாள் 2023-10-20.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  4. maalaimalar (2023-10-20). "Thiraiyin Marupakkam". www.maalaimalar.com. Archived from the original on 2023-10-20. பார்க்கப்பட்ட நாள் 2023-10-20.
  5. தினத்தந்தி (2023-10-19). "திரையின் மறுபக்கம் : சினிமா விமர்சனம்". www.dailythanthi.com. Archived from the original on 2023-10-20. பார்க்கப்பட்ட நாள் 2023-10-20.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=திரையின்_மறுபக்கம்&oldid=32838" இருந்து மீள்விக்கப்பட்டது