திருவுந்தியார் (மாணிக்க வாசகர்)
மாணிக்க வாசகர் பாடிய திருவாசகம் நூலில் திருவுந்தியார் [1] என்னும் தலைப்பில் 20 பாடல்கள் உள்ளன. யாப்பிலக்கண வகையில் இந்தப் பாடல்களைக் கலித்தாழிசை என்பர். இந்தப் பாடல்கள் தில்லையில் பாடப்பட்டவை. பாடல் - எடுத்துக்காட்டு
- வளைந்தது வில்லு விளைந்தது பூசல்
- உளைந்தன முப்புரம் உந்தீபற
- ஒருங்குடன் வெந்தவா றுந்தீபற.
விளக்கம்
- (மேருமலை) சிவபெருமானின் வில்லாக வளைந்தது. அதனால் பூசல்போர் மூண்டது. அதனால் முப்புரம் என்னும் மூன்று கோட்டைகள் அழிந்தன - என்று சொல்லிக்கொண்டு உந்தீ பற - என்கிறாள் ஒருத்தி.
- மூன்று கோட்டைகளும் ஒரே நேரத்தில் பற்றி எரிந்தன - என்று சொல்லிக்கொண்டு உந்தீ பற - என்கிறாள் மற்றொருத்தி.