திருவிடந்தை

திருவிடந்தை (Thiruvidandai) என்பது தமிழ்நாட்டின், செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்த ஒரு கிராமம் ஆகும். இது திருவான்மியூர்க்கு தெற்கே 19 கிலோமீட்டர் தொலைவிலும், கோவளத்தில் இருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் தமிழ்நாட்டின் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ளது. இந்த கிராமத்தின் பெயர் நித்தியகல்யாண பெருமாள் கோயிலிருந்து பெறப்பட்டதாகும்.

இந்தியப் பாதுகாப்புத் துறை கண்காட்சி, 2018

திருவிடந்தை கிராமக் கடற்கரை பகுதியில் இந்தியப் பாதுகாப்புத் துறையின் நான்கு நாள் கண்காட்சி (DefExpo 2018) 11 ஏப்ரல் 2018 முதல் தொடங்கியது. 12 ஏப்ரல் 2018 அன்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கண்காட்சியை முறைப்படி திறந்து வைத்தார். இக்கண்காட்சியில் 500 இந்தியப் பாதுகாப்புத் தளவாட உற்பத்தி நிறுவனங்களும், 150 வெளிநாட்டு நிறுவனங்களும் கலந்து கொண்டது.[1][2][3]

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=திருவிடந்தை&oldid=40558" இருந்து மீள்விக்கப்பட்டது