திருவாரூர் பக்தவத்சலம்


திருவாரூர் பக்தவத்சலம் (பி. நவம்பர் 25)[1] தென்னிந்தியாவைச் சேர்ந்த மிருதங்க இசைக் கலைஞர் [2] ஆவார்.

திருவாரூர் பக்தவத்சலம்
திருவாரூர் பக்தவத்சலம்
இயற்பெயர்/
அறியும் பெயர்
திருவாரூர் பக்தவத்சலம்
பிறந்ததிகதி நவம்பர் 25

ஆரம்பகால வாழ்க்கை

பக்தவத்சலம் ஆரம்பகால இசைப் பயிற்சியினை தனது மாமா திருவாரூர் டி. ஆர். கிருஷ்ணமூர்த்தியிடம் பெற்றார். தொடர்ந்து தனது தாயார் டி. ஆர். ஆனந்தவல்லியிடம் இசையினைக் கற்றார்.

தொழில் வாழ்க்கை

மதுரை சோமு, எம். எல். வசந்தகுமாரி, மகாராஜபுரம் சந்தானம், கே. வீ. நாராயணசுவாமி, மங்களம்பள்ளி பாலமுரளிகிருஷ்ணா போன்ற புகழ்மிக்க கருநாடக இசைப் பாடகர்களுக்கு பக்க வாத்தியமாக மிருதங்கம் வாசித்திருக்கிறார். டி. வி. சங்கரநாராயணன், கே. ஜே. யேசுதாஸ் ஆகியோருக்கு பக்க வாத்தியமாக மிருதங்கம் வாசித்து வருகிறார்.

விருதுகள்

  • இசைச் செல்வம், வழங்கியது: முத்தமிழ்ப் பேரவை
  • மிருதங்க வாத்ய மணி
  • மிருதங்க நாத மணி
  • மிருதங்க கலா பாரதி
  • இலய வாத்யா, வழங்கியது: சாம்ராட் இந்தியன் கிளாசிக்கல் மியூசிசியன்ஸ் பெடரேசன், கும்பகோணம்
  • மிருதங்க சக்ரவர்த்தி, வழங்கியது: நெமிலி பால திருபுரசுந்தரி பால பீடம்
  • தாள வித்யாதர சுதா, வழங்கியது: சக்தி அருள் கூடம் நற்பவி, தாம்பரம் (சென்னை)
  • வாழ்நாள் சாதனையாளர் விருது, வழங்கியது: சாந்தி ஆர்ட்ஸ் பவுண்டேசன் (சென்னை)

மேற்கோள்கள்

  1. Ramakrishnan, M. V. (27 November 2009). "Rapport that's rare". தி இந்து. http://www.thehindu.com/arts/music/article55053.ece. பார்த்த நாள்: 8 May 2011. 
  2. "Cultural festival to serve as bridge between artists across States". தி இந்து. 11 January 2011 இம் மூலத்தில் இருந்து 25 ஜனவரி 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130125142001/http://www.hindu.com/2011/01/11/stories/2011011160870200.htm. பார்த்த நாள்: 8 May 2011. 

வெளியிணைப்புகள்

பக்தவத்சலம் குறித்து தி இந்து நாளிதழில் எழுதப்பட்ட ஒரு கட்டுரை

"https://tamilar.wiki/index.php?title=திருவாரூர்_பக்தவத்சலம்&oldid=7390" இருந்து மீள்விக்கப்பட்டது