திருவள்ளுவர் ஞானம்
திருவள்ளுவர் ஞானம் [1] என்னும் 16 ஆம் நூற்றாண்டில் தோன்றியது. இதனை இயற்றிய திருவள்ளுவர் திருக்குறளை இயற்றிய திருவள்ளுவர் அல்லர்.. திருவள்ளுவர் ஞானத்தில் 16 பாடல்கள் உள்ளன. எண்சீர் விருத்தம், கலிவிருத்தம், கட்டளைக் கலித்துறை, வெண்பா என்னும் நால்வகை யாப்புகளால் ஆன பாடல்கள் இவை.
இந்தப் பாடல்கள் அனைத்தும் அப்படியே 17-18 நூற்றாண்டினதாகக் கொள்ளத்தக்க 'ஞான வெட்டியான்' என்னும் நூலில் உள்ளன.
அடிக்குறிப்பு
- ↑ மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1976, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, மூன்றாம் பாகம். சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. பக். 214.