திருமெய்ஞானம் ஞானபரமேஸ்வரர் கோயில்

திருமெய்ஞானம் ஞானபரமேஸ்வரர் கோயில் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகியோரால் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 96ஆவது சிவத்தலமாகும். திருநாலூர் மயானம் என்றழைக்கப்படுகிறது.[1] கஜபிருஷ்ட அமைப்பில் உள்ள விமானத்தைக் கொண்ட இக்கோயில் வித்தியாசமான அமைப்பில் அமைந்துள்ளது.

தேவாரம் பாடல் பெற்ற
திருமெய்ஞானம் ஞானபரமேஸ்வரர் கோயில்
பெயர்
புராண பெயர்(கள்):திருமயானம், திருநாலூர் மயானம், நாத்தூர்
அமைவிடம்
ஊர்:திருமெய்ஞானம்
மாவட்டம்:தஞ்சாவூர்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:ஞானபரமேஸ்வரர், பலாசவனநாதர்
தாயார்:ஞானாம்பிகை, பெரிய நாயகி
தல விருட்சம்:பலாசு, வில்வம்
தீர்த்தம்:ஞானதீர்த்தம், சந்திர தீர்த்தம்
பாடல்
பாடல் வகை:தேவாரம்
பாடியவர்கள்:திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர்
வரலாறு
அமைத்தவர்:சோழர்கள்

தல வரலாறு

 
நுழைவாயில்

சோழர்கள் காலத்தில் சதுர்வேதி மங்கலம் என்றும், தமிழில் நால்வேதியூர் என்றும், பின்னர் நாலூர் என வழங்கப்படுகிறது. குலோத்துங்க சோழனின் படைத்தளபதி ஆகிய பிரமாதிராஜன் என்கிற ஞானமூர்த்தி பிறந்த ஊர் இந்த திருநாலூர். பெரும் தவசீலரான ஆபஸ்தம்பர் இந்த இறைவனை பூசித்து பெரும் பேறு பெற்றார்.

இவ்வாலய லிங்கத் திருமேனியின் தலையில் சில நேரங்களில் பெரிய பாம்பு ஒன்று படமெடுத்த நிலையில் காணப்படும். இது பற்றிய குறிப்பு தேவாரத்திலும் உள்ளது. மயானம் என முடியும் திருத்தலங்கள் ஐந்து உள்ளன. அவை நாலூர் மயானம், திருக்கடவூர் மயானம், காழி மயானம், வீழி மயானம், கச்சி மயானம். இந்த நல்லூர் மயானத்திற்கு தென்மேற்கே சுமார் ஒன்றறை கி.மீ. தொலைவில் நாலூர் என்ற ஊர் உள்ளது. இது வைப்புத்தலமாகும்.

அமைவிடம்

கும்பகோணத்தில் இருந்து சுமார் 16 கி.மீ. தொலைவில் உள்ள குடவாசலை அடைந்து அங்கிருந்து 5 கி.மீ தொலைவில் இவ்வூர் உள்ளது.

இறைவன், இறைவி

இத்தலத்தின் இறைவன் ஞானபரமேஸ்வரர், இறைவி ஞானாம்பிகை.

தல விருட்சம்

இத்தலத்தில் தலவிருட்சமாக பலாசு மரமும் வில்வம் மரமும் உள்ளன.

மேற்கோள்கள்

  1. வீ.ஜெயபால், சைவ நால்வரால் பாடப்பெற்ற திருத்தலங்கள், சைவ சித்தாந்த ஆய்வு மையம், தஞ்சாவூர் 613 009, 2014

வெளி இணைப்புகள்

இவற்றையும் பார்க்க