திருமழிசை ஜகந்நாத பெருமாள் கோயில்
திருமழிசை ஜகந்நாத பெருமாள் கோயில் என்பது இந்திய தீபகற்பத்தின் தமிழ்நாடு மாநிலத்தில் திருவள்ளூர் மாவட்டத்தின் திருமழிசை புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள ஒரு பெருமாள் கோயில் ஆகும்.[3]
திருமழிசை ஜகந்நாத பெருமாள் கோயில் | |
---|---|
ஆள்கூறுகள்: | 13°03′08″N 80°03′41″E / 13.0523°N 80.0615°E |
பெயர் | |
வேறு பெயர்(கள்): | மத்திய ஜகந்நாதம்[1] |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | திருவள்ளூர் மாவட்டம் |
அமைவிடம்: | திருமழிசை, திருவள்ளூர் மாவட்டம் |
சட்டமன்றத் தொகுதி: | பூந்தமல்லி (சட்டமன்றத் தொகுதி) |
மக்களவைத் தொகுதி: | திருவள்ளூர் மக்களவைத் தொகுதி |
ஏற்றம்: | 78 m (256 அடி) |
கோயில் தகவல் | |
மூலவர்: | ஜகந்நாத பெருமாள் |
தாயார்: | திருமங்கைவல்லி தாயார் |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கல்வெட்டுகள்: | உள்ளன |
வரலாறு | |
கட்டிய நாள்: | 1,000 ஆண்டுகள் தொன்மையானது[2] |
கடல் மட்டத்திலிருந்து சுமார் 78 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள திருமழிசை ஜகந்நாத பெருமாள் கோயிலின் புவியியல் ஆள்கூறுகள், 13°03′08″N 80°03′41″E / 13.0523°N 80.0615°E ஆகும்.
இக்கோயில், தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இயங்குகிறது.[4] இக்கோயிலில் திருமங்கைவல்லி தாயார் சன்னதி, பக்திசாரர் என்கிற திருமழிசை ஆழ்வார் சன்னதி, ஆண்டாள் சன்னதி மற்றும் இராமானுசர் சன்னதி ஆகியவையும் உள்ளன. வைகாநச ஆகம முறைப்படி பூசைகள் நடக்கும் இக்கோயிலின் தலவிருட்சம் பாரிஜாதம் மற்றும் தீர்த்தம் பிருகு புஷ்கரணி ஆகும்.[5]
2022ஆம் ஆண்டு சூலை மாதம் ஏழாம் நாள் கொடியேற்றத்துடன் தொடங்கிய இக்கோயிலின் ஆனி பிரம்மோத்சவத் திருவிழாவின் தேரோட்டம் சூலை 14ஆம் நாள் நடைபெற்றது. மொத்தம் 10 நாட்கள் திருவிழா கொண்டாடப்பட்டது.[6] 2023ஆம் ஆண்டு சூன் மாதம் 27ஆம் நாள் கொடியேற்றத்துடன் தொடங்கிய ஆனி பிரம்மோத்சவத் திருவிழாவின் தேரோட்டம் சூலை மாதம் மூன்றாம் நாள் நடைபெற்றது.[7][8]
மேற்கோள்கள்
- ↑ மு.இசக்கியப்பன் (2023-07-06). "மத்திய ஜகந்நாதம் என்னும் திருமழிசை". காமதேனு. பார்க்கப்பட்ட நாள் 2023-07-13.
- ↑ "Jagannatha Perumal Temple – Hindu Temple Timings, History, Location, Deity, shlokas" (in English). பார்க்கப்பட்ட நாள் 2023-07-13.
- ↑ "Jagannatha Perumal Temple, Thirumazhisai, Chennai suburb". greenmesg.org. பார்க்கப்பட்ட நாள் 2023-07-13.
- ↑ "Arulmigu Jaganatha Perumal Alias Thirumazhisai Azhwar Temple, Thirumazhisai - 600124, Tiruvallur District [TM001829].,Thirumazhisai Azhwar,Jaganatha Perumal". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2023-07-13.
- ↑ "Jagannatha Perumal Temple : Jagannatha Perumal Jagannatha Perumal Temple Details". temple.dinamalar.com. பார்க்கப்பட்ட நாள் 2023-07-13.
- ↑ மாலை மலர் (2022-07-15). "திருமழிசை ஜெகந்நாத பெருமாள் கோவில் தேரோட்டம்". www.maalaimalar.com. பார்க்கப்பட்ட நாள் 2023-07-13.
- ↑ "திருமழிசை ஜெகன்னாத பெருமாள் கோவிலில் நாளை ஆனி பிரம்மோற்சவம் கொடியேற்றம் - Dinamalar Tamil News". Dinamalar. 2023-06-26. பார்க்கப்பட்ட நாள் 2023-07-13.
- ↑ Maalaimalar (2023-06-27). "திருமழிசை ஜெகந்நாத பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழா தொடக்கம்" (in ta). https://www.maalaimalar.com/devotional/worship/thirumalisai-jagannath-temple-brahmotsavam-start-628258.