திருமழிசை
திருமழிசை (ஆங்கிலம்:Thirumazhisai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவள்ளூர் மாவட்டத்தின் பூந்தமல்லி வட்டத்தில் இருக்கும் பேரூராட்சி ஆகும்.
திருமழிசை | |
அமைவிடம் | 13°03′09″N 80°03′37″E / 13.052500°N 80.060300°ECoordinates: 13°03′09″N 80°03′37″E / 13.052500°N 80.060300°E |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | திருவள்ளூர் |
வட்டம் | பூந்தமல்லி |
ஆளுநர் | [1] |
முதலமைச்சர் | [2] |
மாவட்ட ஆட்சியர் | த. பிரபுசங்கர், இ. ஆ. ப [3] |
மக்கள் தொகை • அடர்த்தி |
19,733 (2011[update]) • 3,289/km2 (8,518/sq mi) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு • உயரம் |
6 சதுர கிலோமீட்டர்கள் (2.3 sq mi) • 54 மீட்டர்கள் (177 அடி) |
இணையதளம் | www.townpanchayat.in/thirumazhisai |
இது சென்னை பெருநகர் வளர்ச்சிக்குழும எல்லைக்குட்பட்ட பேரூராட்சியாகும். இது சென்னையிலிருந்து 24 கி.மீ துரத்தில் அமைந்துள்ளது. இது திருமழிசை ஆழ்வார் பிறந்த திருத்தலமாகும். இங்கு அருள்மிகு ஒத்தாண்டீஸ்வரர் திருக்கோயில், அருள்மிகு ஜெகநாதபெருமாள் மற்றும் திருமழிசை ஆழ்வார் திருக்கோயில், ஸ்ரீவீற்றிருந்த பெருமாள் திருக்கோயில்கள் அமைந்துள்ளது.
அமைவிடம்
இப்பேரூராட்சி சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை மற்றும் சென்னை - திருவள்ளூர் மாநில நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இது மாவட்டத் தலைமையிடமான திருவள்ளூரிலிருந்து 24 கிமீ தொலைவில் உள்ளது. இதன் கிழக்கில் சென்னை 22 கிமீ; வடக்கில் பூந்தமல்லி 5 கிமீ; தெற்கில் ஸ்ரீபெரும்புதூர் 45 கிமீ தொலைவில் உள்ளது. இதனருகில் அமைந்த தொடருந்து நிலையம் 15 கிமீ தொலைவில் உள்ள திருநின்றவூரில் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
6 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 141 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி பூந்தமல்லி (சட்டமன்றத் தொகுதி) மற்றும் திருவள்ளூர் மக்களவைத் தொகுதிக்குட்பட்டதாகும்.[4]
மக்கள் தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 5,220 வீடுகளும், 19,733 மக்கள்தொகையும், கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 81.42% மற்றும் பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு, 996 பெண்கள் வீதம் உள்ளனர்.[5]
சிறப்பு
இந்த தலத்தின் தனிச்சிறப்பு, திருமழிசை ஆழ்வார் அவதரித்த தலமாகும். இவர் 12 ஆழ்வார்களில் ஒருவராவார். திருமழிசை ஆழ்வாருக்கென்று தனி ஆலயம் இந்த ஊரில் உள்ளது. இந்தக் கோயில் ஜெகந்நாத பெருமாள் கோயில் எனவும் அழைக்கப்படுகிறது. இத்தலத்தில் திருமழிசை ஆழ்வாருக்கு காலில் கண் உள்ளது [6]இதற்கு அருகிலேயே வீற்றிருந்த பெருமாள் கோவில் உள்ளது. இங்கு பெருமாள் அமர்ந்த கோலத்தில் அஷ்டலட்சுமிகளுடன் காட்சி அளிக்கிறார். செங்குந்தர் குல கார்கோடக ஆதினம் மட்டும் நாட்டாமை சபைக்கு பாத்தியப்பட்ட ஒத்தாண்டேசுவரர் கோயில் இங்கு அமைந்துள்ள பழைமையான சிவன் கோயிலாகும்.[7][8]
ஆதாரங்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ திருமழிசை பேரூராட்சியின் இணையதளம்
- ↑ Thirumazhisai Population Census 2011
- ↑ http://temple.dinamalar.com/New.php?id=142
- ↑ https://www.dailythanthi.com/News/Districts/2022/02/08193744/Thirumalisai-Othandeswarar-Temple-Kumbabhishekam.vpf
- ↑ http://temple.dinamalar.com/New.php?id=141