திருமயம் சத்தியகிரீசுவரர் கோயில்
திருமயம் சத்தியகிரீசுவரர் கோயில் என்பது தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டம், திருமயம் நகரில் அமைந்துள்ளது.
திருமயம் சத்தியகிரீசுவரர் கோயில் | |
---|---|
படிமம்:N-TN-C172 Rock cut siva Sathyagirisvarar Tirumayam.jpg | |
ஆள்கூறுகள்: | 10°14′49″N 78°45′06″E / 10.246945°N 78.751615°ECoordinates: 10°14′49″N 78°45′06″E / 10.246945°N 78.751615°E |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | புதுக்கோட்டை |
அமைவிடம்: | திருமயம் |
சட்டமன்றத் தொகுதி: | திருமயம் |
மக்களவைத் தொகுதி: | சிவகங்கை |
ஏற்றம்: | 142 m (466 அடி) |
கோயில் தகவல் | |
மூலவர்: | சத்தியகிரீசுவரர் |
தாயார்: | வேணுவனேசுவரி |
சிறப்புத் திருவிழாக்கள்: | சித்திரைத் திருவிழா, தைப்பூசம், ஆடிப்பூரம், தீபாவளி, தைப்பொங்கல், தமிழ்ப் புத்தாண்டு, ஆங்கிலப் புத்தாண்டு |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | திராவிடக் கட்டிடக்கலை |
அமைவிடம்
இவ்வூர் புதுக்கோட்டையிலிருந்து 19.1 கி.மீ தொலைவில் உள்ளது.
மூலவர்
இத்தலத்தின் மூலவர் சத்தியகிரீசுவரர் ஆவார். இறைவி வேணுவனேஸ்வரி ஆவார். [1]
அமைப்பு
பல்லவர் காலத்தில் சைவ வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக ஒரே சுற்றுச்சுவருடன் இக்கோயிலும் இதற்கடுத்துள்ள பெருமாள் கோயிலும் திருமயம் மலைச்சரிவில் ஒரே கல்லில் குடைவரைக் கோயிலாக உள்ளது.[1] மதுரைக் கோயிலைப் போலவே சுவாமி சன்னதியும், அம்மன் சன்னதியும் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. இந்தச் சிவன் கோயிலைத் தனியாகச் சுற்றி வர முடியாது. சிவன், பெருமாள் ஒரு சேர மலையை சுற்றி வந்தால் மட்டுமே கிரிவலம் செய்தல் முடியும்.[2]
கோயில் நடைதிறந்திருக்கும் நேரம்
காலை 6.00 மணி முதல் 11.00 மணி வரையிலும், மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரையிலும் நடை திறந்திருக்கும்.[1]
திருவிழா
சித்திரைத் திருவிழா, தைப்பூசம், பௌர்ணமி, அமாவாசை, பிரதோஷம் உள்ளிட்ட நாள்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.