திருப்போரூர் வட்டம்
திருப்போரூர் வட்டம், இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தின், செங்கல்பட்டு மாவட்டத்தின் 8 வருவாய் வட்டங்களில் ஒன்றாகும். இது செங்கல்பட்டு வட்டத்தின் பகுதிகளைக் கொண்டு 2012-இல் புதிதாக நிறுவப்பட்டது. [1] இத்தாலுகாவின் தலைமையகம் திருப்போரூர் நகரம் ஆகும்.
வரலாறு
செங்கல்பட்டு தாலுக்காவின் வருவாய் கிராமங்களைக் கொண்டு திருப்போரூர் வருவாய் வட்டம் உருவாக்கப்பட்டது. இத்தாலுக்கா 2012 -ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர், ஜெ. ஜெயலலிதாவால் உருவாக்கப்பட்டது.[2]
வருவாய் வட்ட நிர்வாகம்
புதிதாக உருவாக்கப்பட்ட திருப்போரூர் வருவாய் வட்டம், திருப்போரூர், கேளம்பாக்கம், கரும்பாக்கம், மனம்பத்தி, பையனூர், நெல்லிக்குப்பம், மாம்பாக்கம் 7 உள்வட்டங்களும்[3], 96 வருவாய் கிராமங்களும் கொண்டது.[4]
இவ்வட்டத்தில் திருப்போரூர் ஊராட்சி ஒன்றியம் உள்ளது.
மேற்கோள்கள்
- ↑ புதிய வருவாய் வட்டங்கள் – அரசிதழ் வெளியீடு
- ↑ Correspondent, Special. "Taluks with over 4 lakh population to be bifurcated" (in en). The Hindu. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/taluks-with-over-4-lakh-population-to-be-bifurcated/article3399175.ece.
- ↑ திருபோரூர் வட்டத்தின் உள்வட்டங்கள்
- ↑ திருப்போரூர் வட்டத்தின் வருவாய் கிராமங்கள்