திருப்புறம்பியம் போர்
திருப்புறம்பியம் போர் (Battle of Sri Purambiyam), கொள்ளிடத்தின் கரையில் உள்ள திருப்புறம்பியம் என்ற இடத்தில் பல்லவன் அபராசிதவர்மனுக்கும், பாண்டியன் இரண்டாம் வரகுணனுக்கும் கி.பி.885இல் நடந்தது. இதில் விசயாலயச் சோழனின் மகன்ஆதித்த சோழன், கங்க மன்னன் முதலாம் பிருதிவிபதி ஆகியோர் பல்லவருடன் சேர்ந்து பாண்டியனை எதிர்த்தனர். பாண்டியர்களுக்கு ஆதரவாக முத்தரையர்கள் போரிட்டனர்.[1] பாண்டியன் தோற்றான். கங்க மன்னன் பிருதிவிபதி இறந்தான். அபராசிதவர்ம பல்லவன் வென்றான். எனினும் ஆதித்த சோழனுக்கே பெரும்பயன் கிடைத்தது. சோழநாடு முழுவதையும் அவன் மீட்டுக் கொண்டான்[2]. போர் நடைபெற்ற பகுதியை இன்றும் மக்கள் நினைவுகூர்கின்றனர். "உதிரம் வடிந்த தோப்பு" என்பது இன்று குதிரைத் தோப்பாக நிற்கின்றது[3]
திருப்புறம்பியம் சமர் | |||||||
---|---|---|---|---|---|---|---|
|
|||||||
பிரிவினர் | |||||||
பல்லவர் மேலைக் கங்கர் இடைக்காலச் சோழர்கள்[சான்று தேவை] | பாண்டியர் பல்லவப் பிரிவுகள் |
||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||
அபராசித வர்ம பல்லவன் முதலாம் பிருதிவிபதி † ஆதித்த சோழன்[சான்று தேவை] | வரகுண வர்மன் நிருபதுங்கவர்மன் |
||||||
பலம் | |||||||
தெரியவில்லை | தெரியவில்லை |
போரின் விளைவு
இப்போர் நிகழ்வால் பாண்டியரது முதற்பேரரசின் வலிமை குன்றியது. உடன் பல்லவ பேரரசின் வலிமையும் குன்றியது. சோழரது ஆட்சி மீண்டும் நிலைப்பெற காரணமாய் அமைந்தது திருப்புறம்பியம் போரின் முடிவால் பரகேசரி விசயாலயன் புதல்வன் ஆதித்த சோழன் சோழமண்டலம் முழுமையும் ஆட்சி புரியும் பெருமை எய்தினார். தமிழக வரலாற்றில் ஒரு குறிப்பிடும்படியான நிகழ்வானது திருப்புறம்பியம் போர்.[4]
நடுகற்கோயில்
இப்போரில் இறந்த கங்க மன்னன் முதலாம் பிருதிவிபதியின் பள்ளிப்படைக் கோயில் ஒன்றும்[சான்று தேவை], உதிரப்பட்டி என்ற பெயருடைய நிலப்பரப்பும்[சான்று தேவை], கச்சியாண்டவர் என்ற பள்ளிப்படையும்[சான்று தேவை] இன்றும் திருப்புறம்பியத்தில் உள்ளது.
மேற்கோள்கள்
- ↑ https://www.hindutamil.in/news/spirituals/thanjai-periya-koil/538045-significance-of-thiruppurambiam-1.html
- ↑ "5.1 பின்புலங்கள் (தமிழ் இணையக் கல்விக்கழகம்)". பார்க்கப்பட்ட நாள் 16 சூலை 2015.
- ↑ முனைவர் மு. இளங்கோவன் (26 சூலை, 2010). "தமிழ் இணைய ஆர்வலர் ஆலவாய் அ.சொக்கலிங்கம் (ஒன்இந்தியா.கொம்)". http://tamil.oneindia.com/art-culture/essays/2010/26-tamil-language-internet-aalavai-chokkalingam.html. பார்த்த நாள்: 16 சூலை 2015.
- ↑ பாண்டியர் வரலாறு ஆசிரியர்: தி.வை.சதாசிவ பண்டாரத்தார்;வெளியீடு:நாம் தமிழர் பதிப்பகம்;சென்னை-5: பக்கம்:48