திருப்பாடகம் பாண்டவதூதப் பெருமாள் திருக்கோயில்

(திருப்பாடகம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

திருப்பாடகம் பாண்டவதூதப் பெருமாள் திருக்கோயில் 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். இத்தலம் காஞ்சிபுரம் நகரத்தின திருப்பாடகம் எனும் பகுதியில் அமைந்துள்ளது. பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 48-ஆவது திவ்ய தேசம் ஆகும். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இத்தலத்திற்கு வந்து கிருஷ்ணனை தரிசித்து வந்தால் எந்தக் கஷ்டமாக இருந்தாலும் விலகிவிடும் என்பது நம்பிக்கை. கிருஷ்ணர் இத்தலத்தில் 25 அடி உயரத்தில், மூலஸ்தானத்தில் அமர்ந்த திருக்கோலத்தில் காட்சியளிப்பது சிறப்பம்சமாகும்.[1]

ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப் பெற்ற
திருப்பாடகம் பாண்டவதூதப் பெருமாள் திருக்கோயில் (திருப்பாடகம்)
திருப்பாடகம் பாண்டவதூதப் பெருமாள் திருக்கோயில்
புவியியல் ஆள்கூற்று:12°50′34″N 79°41′50″E / 12.842649°N 79.697110°E / 12.842649; 79.697110
பெயர்
புராண பெயர்(கள்):திருப்பாடகம்
பெயர்:திருப்பாடகம் பாண்டவதூதப் பெருமாள் திருக்கோயில் (திருப்பாடகம்)
அமைவிடம்
ஊர்:திருப்பாடகம்
மாவட்டம்:காஞ்சிபுரம்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:பாண்டவ தூதர்
தாயார்:சத்யபாமா, ருக்மணி
தீர்த்தம்:மத்ஸ்ய தீர்த்தம்
சிறப்பு திருவிழாக்கள்:கிருஷ்ண ஜெயந்தி, தீபாவளி, முக்கோட்டி ஏகாதசி, பங்குனி உத்திரம், கார்த்திகைப் பரணி.
மங்களாசாசனம்
பாடல் வகை:மங்களசாசனம்
மங்களாசாசனம் செய்தவர்கள்:பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசையாழ்வார், திருமங்கையாழ்வார்
விமானம்:பத்ர விமானம்
வரலாறு
தொன்மை:1000-2000 வருடங்களுக்கு முன்
தொலைபேசி எண்:+91- 44-2723 1899

அமைவிடம்

கடல் மட்டத்திலிருந்து சுமார் 110 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இக்கோயிலின் புவியியல் ஆள்கூறுகள்: 12°50'33.5"N, 79°41'49.6"E (அதாவது, 12.842649°N, 79.697110°E) ஆகும்.

தலப் பெயர்க்காரணம்

கண்ணன் பஞ்சபாண்டவர்களுக்குத் தூதுவராக சென்றதால், இத்தல இறைவன் "பாண்டவ தூதப்பெருமாள்" என அழைக்கப்படுகிறார். இங்குள்ள கல்வெட்டுக்களில் இவரை "தூதஹரி" எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

தலப் பெருமை

  • திருதராஷ்டிரனுக்கு கண்பார்வை அளித்து தனது பெரிய விஸ்வரூப தரிசனத்தை கிருஷ்ண பகவான் இத்தலத்தில் காட்டியருளினார்.
  • ரோகிணி தேவி கிருஷ்ண பகவானை வழிபட்டு சந்திரனை அடையும் பேறு பெற்றாள்.

தல புராணம்

பாரத யுத்தம் முடிந்த வெகுகாலத்திற்கு பின் ஜனமேஜயர் என்ற மகாராஜா, வைசம்பாயனர் என்னும் ரிஷியிடம் பாரதக் கதையை கேட்க வந்தார். அப்போது ராஜா, கிருஷ்ணர் தூது சென்றபோது நிலவறையில் அமர்ந்த கோலத்தில் எடுத்த விசுவரூப தரிசனத்தை நானும் தரிசிக்க வேண்டும். அதற்கான வழிமுறைகளை கூறுங்கள் என ரிஷியிடம் வேண்டினார். ரிஷி கூறிய அறிவுரையின்படி இத்தல தீர்த்தத்தில் அமர்ந்து தவம் செய்த ஜனமேஜய மன்னனுக்காக பெருமாள், தன் பாரத கால தூது கோலத்தை இத்தலத்தில் காட்டியருளினார்.

மேற்கோள்கள்

  1. சிறப்பம்சம்: அதிசயத்தின் அடிப்படையில்: கிருஷ்ணர் இத்தலத்தில் 25 அடி உயரத்தில், மூலஸ்தானத்தில் அமர்ந்த திருக்கோலத்தில் காட்சியளிப்பது வேறு எங்கும் காண முடியாத சிறப்பம்சமாகும்.

வெளி இணைப்புகள்

தினமலர்க் கோயில்கள்