திருப்தி

நிறைவு, மன நிறைவு, திருப்தி அல்லது ஆத்மதிருப்தி (satisfaction or contentment) என்பது தாம் நினைத்த காரியம் சரிவர செய்தாலோ, இயற்கையாகவே நிகழ்வுகள் எதிர்நோக்கியபடி அமைந்தாலோ உண்டாகும் உணர்ச்சியாகும். இதற்கு மேல் எதுவும் தேவையில்லா நிலையினையும் திருப்தி எனக்கூறலாம்.

எட்கர் ஃபாரஸ்ஜின் (Edgard Farasijn) வரைந்த "மனித திருப்திகள்" (Human Contentments), இருபதாம் நூற்றாண்டு,

மரபணுக்களும் திருப்தியும்

நம்ப எளிதில்லை எனினும் ஒருவரின் தாழ்வு மனப்பான்மை பொருந்திய மூளையையும் எண்ணங்களையும் மரபணுக்கள் மூலம் அடுத்த சந்ததிக்கு அளிக்க இயலும். எளிதில் இன்பமுறும் மூளையையும் அடுத்த சந்ததியோடு பகிர முடியும். ஒவ்வொரு பகிர்தலும் வெவ்வேறு அளவுகோலாக இருப்பினும் இது சாத்தியம். ஒருவர் மிகவும் சோகமான நிலையிலும் தன் மரபணுவின் திருப்தி நிலைக்கு எளிதில் திரும்ப முடியும்[1].

குறிக்கோள்களை அடைதல்

தனக்கென்று குறிக்கோள்களை ஏற்படுத்திக்கொண்டு அவற்றை அடைவது பெரிதும் திருப்தியளிக்கும். தன்னால் இதற்கு மேலும் சாதிக்க இயலும் என்ற தன்னம்பிக்கையை ஊட்டும். எனவே ஒருவர் தமக்கென்று அடையக்கூடிய குறிக்கோள்களை (ஆனால் எளிதில் அல்ல!) வகுத்துக்கொள்ளுதல் அவசியம், ஏனெனில் அவற்றை அடையப் போராடும் தருணங்களும், அதற்கு வித்திடும் ஆற்றலும் ஒருவருக்கு தேவையான திருப்தியளிக்கும் என்று மனநல வல்லுநர்கள் பகர்கின்றனர்[2] .

பணம்

பலரும் தமது திருப்தி மற்றும் இன்பத்தினைப் பணத்துடன் இணைக்கிறார்கள். எனவே பணக்காரராவதே திருப்தி என்றும் எண்ணுகின்றனர். இது அமெரிக்க சமூகம் பொருளாதாரத்தினை அடிப்படையாக வைத்து வளர்வதனைக் குறிக்கின்றது. மேலும் பணமிருந்தால் குறைந்த அளவில் தண்டனை, நிறைந்த உடலாற்றல், குறைந்த பிள்ளைகள் இறப்பு எனவும் இணைக்கின்றனர்[3]. தன் தேவைகளினை பார்த்துக்கொண்ட பிற்கும் எஞ்சியிருக்கும் பணத்தினை செலவிடக்கூடிய பணம் (disposable income) என்பர். இப்படியான செலவிடக்கூடிய பணம் எவ்வளவுக்கு எவ்வளவு அதிகமாக இருக்கிறதோ, அது அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொள்வதில் திருப்தியும், மகிழ்வினை தக்க வைக்காது என்பதே உண்மை. மேலும், சம்பளத்தின் ஒரு நிலையை அடைந்த பின் அது இன்பத்திற்கு வித்திடுவதில்லை எனக்கண்டுகொள்ளப்பட்டுள்ளது[4].

உசாத்துணை

  1. Lykken, David; Tellegen, Auke (3). "Happiness Is A Stochastic Phenomenon". Psychological Science 7 (3): 186–189. https://archive.org/details/sim_psychological-science_1996-05_7_3/page/186. 
  2. Sheldon, K.M.; Elliot, A.J (1999). "Goal Striving, Need Satisfaction, and Longitudinal Well-Being:The Self-Concordance Model". Journal Of Personality and Social Psychology 76: 482–497. https://archive.org/details/sim_journal-of-personality-and-social-psychology_1999-03_76_3/page/482. 
  3. Wilkinson (1996). Unhealthy Societies:The Afflictions of Inequality. 
  4. Veenhoven, Ruut (1991). "Is Happiness Relative?". Social Indicators Research 24: 1–34. 
"https://tamilar.wiki/index.php?title=திருப்தி&oldid=13915" இருந்து மீள்விக்கப்பட்டது