திருநீடூர் அருட்சோமநாதர் கோயில்
சோமநாதர் கோயில் சுந்தரர், நாவுக்கரசர் ஆகியோரால் தேவாரம் பாடல் பெற்ற காவிரி வடகரைச் சிவாலயமாகும். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 21வது சிவத்தலமாகும்.
தேவாரம் பாடல் பெற்ற திருநீடூர் அருட்சோமநாதர் கோயில் | |
---|---|
பெயர் | |
பெயர்: | திருநீடூர் அருட்சோமநாதர் கோயில் |
அமைவிடம் | |
ஊர்: | திருநீடூர் |
மாவட்டம்: | நாகப்பட்டினம் |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | அருள்சோமநாதேசுவரர், கானநிருத்த சங்கரர், பாடியாடிய தேவர்[1] |
தாயார்: | வேதநாயகி, ஆதித்ய அபயப்பிரதாம்பிகை, வேயுறு தோளியம்மை |
தல விருட்சம்: | மகிழமரம் |
தீர்த்தம்: | ஆனந்த, செங்கழுநீரோடை, சூரிய, சந்திர, இந்திர, பத்ரகாளி, முனிவரர், ப்ருதி குண்டம், வருண தீர்த்தங்கள்-ஒன்பது. |
பாடல் | |
பாடல் வகை: | தேவாரம் |
பாடியவர்கள்: | திருநாவுக்கரசர், சுந்தரர் |
வரலாறு | |
அமைத்தவர்: | சோழர் |
அமைவிடம்
இத்தலம் நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை வட்டத்தில் அமைந்துள்ளது.
இறைவன், இறைவி
இத்தலத்தின் இறைவன் சோமநாதர், இறைவி வேயுறுதோளியம்மை. இத்தலத்து இறைவனார் சுயம்பு மூர்த்தி. தலவிருட்டமாக மகிழம் மரமும், தீர்த்தமாக நவ தீர்த்தங்களும் உள்ளன.
முனையடுவார் நாயனார் அவதாரத்தலமிது.[1]
கோயில் அமைப்பு
நுழைவாயிலைக் கடந்து உள்ளே செல்லும்போது பலிபீடம், கொடிமரம், நந்தி ஆகியவை காணப்படுகின்றன. கோயிலின் இடப்புறம் அம்மன் சன்னதி உள்ளது. திருச்சுற்றில் ஞானசம்பந்தர், நாவுக்கரசர், ஆலாலசுந்தரர், மாணிக்கவாசகர், சூரியன், சிவலோக கணபதி, சந்திரன், கால பைரவர் உள்ளனர். ஆண்ட கணபதி, சிவகுருமூர்த்தி, பிராமி, மகேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வராகி, மகேஸ்வரி, சாமுண்டி, சின்யமாயனந்த கணபதி, முருகன், சிவலோக நாதர், கைலாசநாதர், காசிவிசுவநாதர், மகாலட்சுமி ஆகியோர் உள்ளனர். மூலவரின் கருவறை கோஷ்டத்தில் பாலகணபதி, தட்சிணாமூர்த்தி, அண்ணாமலையார், பிரம்மா, துர்க்கை ஆகியோர் காணப்படுகின்றனர்.
குடமுழுக்கு
30 சூன் 1947, 4 சூலை 1985, 5 ஏப்ரல் 2007 ஆகிய நாள்களில் குடமுழுக்கு ஆனதற்கான கல்வெட்டுக் குறிப்புகள் காணப்படுகின்றன.