திருத்தளூர் சிஷ்டகுருநாதேசுவரர் கோயில்

திருத்தளூர் சிஷ்டகுருநாதேஸ்வரர் கோயில் சுந்தரரால் தேவாரம் பாடல் பெற்ற சிவத்தலமாகும். இத்தலத்தில் மூலவர் சிஷ்டகுருநாதேஸ்வரர் என்றும் பசுபதீஸ்வரர் என்றும் வழங்கப்பெறுகிறார், தாயாரின் பெயர் சிவலோகநாயகி என்றும் பூங்கோதை என்றும் வழங்கப்பெறுகிறது. இத்தலத்தில் சூர்யபுஷ்கரிணி எனும் தீர்த்தமும், கொன்றை மரம் தலமரமாகவும் உள்ளது. திருத்துறையூர் என்பது இத்தலத்தின் புராணப்பெயராகும்.இங்கு நர்த்தன விநாயகர் சந்நிதி அமைந்துள்ளது.

தேவாரம் பாடல் பெற்ற
திருத்தளூர் (திருத்துறையூர்) சிஷ்டகுருநாதேசுவரர் திருக்கோயில்
பெயர்
புராண பெயர்(கள்):திருத்துறையூர்
பெயர்:திருத்தளூர் (திருத்துறையூர்) சிஷ்டகுருநாதேசுவரர் திருக்கோயில்
அமைவிடம்
ஊர்:திருத்தளூர்
மாவட்டம்:கடலூர்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:சிஷ்டகுருநாதேஸ்வரர், பசுபதீஸ்வரர்
உற்சவர்:சோமாஸ்கந்தர்
தாயார்:சிவலோகநாயகி, பூங்கோதை
தல விருட்சம்:கொன்றை
தீர்த்தம்:சூர்யபுஷ்கரிணி
ஆகமம்:சிவாகமம்
பாடல்
பாடல் வகை:தேவாரம்
பாடியவர்கள்:சுந்தரர்
தொலைபேசி எண்:04142-248498,94448 07393[1][2]

திருமால்

இத்திருக்கோயிலினுள் ஸ்ரீஆதிகேசவ பக்தவத்சலப் பெருமாள் மற்றும் ஸ்ரீகஜலட்சுமித் தாயார் உள்ளனர்.[1]

கிழப்பாக்கம்

சுந்தரர் வழிபட இத்திருத்தலத்திற்கு வந்திருந்தபோது மறைந்திருந்து, சுந்தரர் வருந்தியபின்னர் முதியவர் வடிவில் இத்தல இறைவனார் அவர் முன்னர் காட்சி தந்து இறைவனை வழிபடாமல் செல்வதை விசாரித்து, இத்தலக் கோபுரத்தைக் காட்ட, அங்கு ரிஷப வாகனத்தில் உமையம்மையுடன் சிவபெருமான காட்சி தந்தார். வயோதிக வடிவில் இறைவனார் வந்து வருந்திச் சென்ற சுந்தரரை ஆட்கொண்டது கிழப்பாக்கம் எனும் கிராமத்தில்.[1]

சுந்தரருக்குக் குருவாக

இத்தல இறைவனார் சுந்தரருக்குச் குருவாக அமர்ந்து உபதேசம் செய்தவர். எனவே குரு தோஷ நிவர்த்தித் தலமாக அமைந்துள்ளது.[1]

திரு அருள்நந்தி சிவாச்சாரியார்

சைவ சமயத்தின் சந்தானக் குரவர்கள் நால்வரில் ஒருவரான ஸ்ரீ அருள்நந்தி சிவாச்சாரியார் பிறந்து வாழ்ந்தத் திருத்தலம் திருத்துறையூர். இவர் முக்தி அடைந்தத் திருத்தலமும் இதுவே. இவரது ஜீவசமாதியும் திருத்துறையூரிலேயே அமைந்துள்ளது.[1]

செல்லும் வழி

பண்ருட்டியிலிருந்து சென்னை செல்லும் வழியே கண்டரக்கோட்டை வழியே அல்லது பண்ருட்டியிலிருந்து புதுப்பேட்டை, சின்னப்பேட்டை வழியே திருத்துறையூரை சென்றடையலாம்.

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 குமுதம் ஜோதிடம்; 23.11.2007
  2. http://temple.dinamalar.com/New.php?id=852

இவற்றையும் பார்க்க

வெளி இணைப்புகள்

அருள்மிகு சிஷ்டகுருநாதேஸ்வரர் திருக்கோயில் - தினமலர் கோவில்கள்