திருச்செந்தூர்
திருச்செந்தூர் (ஆங்கிலம்:Thiruchendur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். திருச்செந்தூரில் முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை என்று போற்றப்படும் சுப்பிரமணிய சுவாமி கோயில் அமைந்துள்ளது.
திருச்செந்தூர் | |
— இரண்டாம் நிலை நகராட்சி — | |
அமைவிடம் | 8°29′41″N 78°07′19″E / 8.494600°N 78.121900°ECoordinates: 8°29′41″N 78°07′19″E / 8.494600°N 78.121900°E |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | தூத்துக்குடி |
வட்டம் | திருச்செந்தூர் |
ஆளுநர் | [1] |
முதலமைச்சர் | [2] |
மாவட்ட ஆட்சியர் | ஜி. லட்சுமிபதி, இ. ஆ. ப [3] |
சட்டமன்றத் தொகுதி | திருச்செந்தூர்
- |
சட்டமன்ற உறுப்பினர் |
அனிதா ராதாகிருஷ்ணன் (திமுக) |
மக்கள் தொகை • அடர்த்தி |
32,171 (2011[update]) • 3,064/km2 (7,936/sq mi) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு • உயரம் |
10.5 சதுர கிலோமீட்டர்கள் (4.1 sq mi) • 32 மீட்டர்கள் (105 அடி) |
இணையதளம் | www.townpanchayat.in/tiruchendur |
இந்நகராட்சியில் திருச்செந்தூர் வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் உள்ளன.
திருச்செந்தூர் நகராட்சி, மாவட்ட தலைநகரான தூத்துக்குடியிலிருந்து 35 கி.மீ. தொலைவிலும், திருநெல்வேலியிலிருந்து 52 கி.மீ. தொலைவிலும் உள்ளது. திருச்செந்தூர் தொடருந்து நிலையம் 0.5 கி.மீ. தொலைவில் உள்ளது. மதுரை சர்வதேச விமான நிலையத்திலிருந்து 173 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 8,271 வீடுகள் கொண்ட இந்த நகராட்சியின் மக்கள்தொகை 32,171 ஆகும்.[4][5]
10.5 ச.கி.மீ. பரப்பும், 21 வார்டுகளும், 72 தெருக்களும் கொண்ட இந்நகராட்சி திருச்செந்தூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், தூத்துக்குடி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[6]
2021-இல் நகராட்சியாக தரம் உயர்த்துதல்
16 அக்டோபர் 2021 அன்று திருச்செந்தூர் பேரூராட்சியை நகராட்சியாக உருவாக்குவதற்கான அரசாணையை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் கூடுதல் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா வெளியிட்டார்.[7][8]
புவியியல் அமைப்பு
திருச்செந்தூரின் கிழக்கில் வங்காள விரிகுடாவும்,வடக்கே காயல்பட்டிணமும்,தெற்கே ஆலந்தலையும்,மேற்கே மேலத்திருச்செந்தூரும் அமைந்துள்ளது.
சுப்பிரமணியசுவாமி கோயில்
திருச்செந்தூரில் முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை என்று போற்றப்படும் சுப்பிரமணிய சுவாமி கோயில் அமைந்துள்ளது. சூரபத்மனைப் போரில் வென்ற செந்தில் நின்று சிரிக்கும் கோயில் இதுதான். ஐப்பசி மாதம் இங்கு நடக்கும் சூரசம்காரம் திருவிழா பிரபலமானது. இது மட்டுமின்றி ஆவணித்திருவிழா மற்றும் மாசித்திருவிழா ஆகியவை இங்கு புகழ்பெற்றவை ஆகும். நாழிக்கிணறு என்ற தீர்த்தம் இங்கு உள்ளது. கடலுக்கு மிக அருகில் உள்ள இந்த நீரூற்றில் தண்ணீர் சுவையாக இருக்கின்றது.[9]
வனத்திருப்பதி
வனத்திருப்பதி கச்சனாவிளை இரயில் நிலையம் அருகில் புன்னை நகரில் அமைந்துள்ள ஒரு அழகான பெருமாள் கோவில். திருச்செந்தூரில் இருந்து 20 கிமீ தொலைவில் உள்ளது.
இதனையும் காண்க
மேற்கோள்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ திருச்செந்தூர் பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்
- ↑ >Tiruchendur Town Panchayat
- ↑ திருச்செந்தூர் பேரூராட்சியின் இணையதளம்
- ↑ kumbakonam corporaon and 19 muniicipalites
- ↑ தமிழ்நாட்டில் புதிய 19 நகராட்சிகள் அறிவிப்பு
- ↑ [1]