திருச்சந்த விருத்தம்
திருச்சந்த விருத்தம் திருமழிசையாழ்வாரால் திருமாலைப் போற்றி 120 விருத்தப்பாக்களைக் கொண்டு இயற்றப்பட்டது.[1] சந்தங்கள் என்பது இனிய இசையை (ஒலியை) எழுப்புவது என்று பொருள்[2], இனிய ஒலிகளால் திருமாலை வணங்கி போற்றியதால் திரு என்னும் அடைமொழியைத் தாங்கி விருத்தம் என்னும் பாக்களால் பாடப்பட்டதால் இந்நூல் திருசந்த விருத்தம் எனப்பெயர் பெற்றது. இது 120 பாசுரங்களை கொண்டது, இது நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் முதலாயிரத்தில் இடம் பெற்றுள்ளது.[3] இது திருமாலை வணக்கத்திற்காகவும், கிருஷ்ணர் மற்றும் வெங்கடாசலபதி போன்ற திருமாலின் அவதாரங்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. [4]
திருச்சந்த விருத்தம் | |
---|---|
திருமாலை → | |
கிருஷ்ணர் கம்சானை கொன்ற ஓவியம், லாசு ஏஞ்சல்சு கவுண்டி மியூசியம் ஆப் ஆர்ட். | |
தகவல்கள் | |
சமயம் | வைணவம் |
நூலாசிரியர் | திருமழிசையாழ்வார் |
மொழி | தமிழ் |
காலம் | பொ. ஊ 9-10 ஆம் நூற்றாண்டு |
வரிகள் | 120 பாடல்கள் |
பாடல்கள்
இந்த இலக்கியம் கிருஷ்ணரின் வாழ்க்கை, அசுரர்களை வதம் செய்தமை, நப்பின்னையை மணக்க காளைகளை அடக்கியமை, குருக்ஷேத்திரப் போரில் கிருஷ்ணரின் பங்கு ஆகியவற்றைப் பற்றிய உள்ளடக்கங்கள் இதில் உள்ளது[5]
கம்சன் மீதான கிருஷ்ணரின் வெற்றியும், பூதனையின் நஞ்சு நிறைந்த பாலை உறிஞ்சிய தெய்வ செயல்களையும், வாமனனின் மூன்றடி மண் செயல்களையும் கீழ்கண்ட பாடல் குறிக்கிறது:[6]
வெஞ்சினத்த வேழ வெண் மருப்பு ஒசித்து உருத்த மா
கஞ்சனைக் கடிந்து மண் அளந்துகொண்ட காலனே
வஞ்சனத்து வந்த பேய்ச்சி ஆவி பாலுள் வாங்கினாய்
அஞ்சனத்த வண்ணன் ஆய ஆதிதேவன் அல்லையே?
—திருச்சந்த விருத்தம், 43-ம் பாசுரம்[7]
கம்ப ராமாயணத்தை எழுதிய கம்பர், இந்தப் படைப்பின் சில பாடல்களிலிருந்து உள்ளூக்கம் பெற்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது:[8]
வானகமும் மண்ணகமும் வெற்பும் ஏழ் கடல்களும்
போனகம் செய்து ஆலிலைத் துயின்ற புண்டரீகனே
தேன் அகஞ்செய் தண் நறும் மலர்த் துழாய் நன் மாலையாய்
கூன் அகம் புகத் தெறித்த கொற்ற வில்லி அல்லையே?
—திருச்சந்த விருத்தம், 30-ம் பாசுரம்[9]
மேற்கோள்கள்
- ↑ "P202235.htm-திருமழிசை ஆழ்வார் | தமிழ் இணையக் கல்விக்கழகம் TAMIL VIRTUAL ACADEMY". https://www.tamilvu.org/ta/courses-degree-p202-p2022-html-old-p202235-28823.
- ↑ "5.1 சந்தம் - சொல்பொருள் விளக்கம் | தமிழ் இணையக் கல்விக்கழகம் TAMIL VIRTUAL ACADEMY". https://www.tamilvu.org/ta/courses-degree-d051-d0513-html-d0513551-22510.
- ↑ "வைணவ இலக்கியங்கள் | தமிழ் இணையக் கல்விக்கழகம் TAMIL VIRTUAL ACADEMY". https://www.tamilvu.org/ta/courses-degree-a041-a0412-html-a0412225-8201.
- ↑ Ramesan, N. (1981) (in en). The Tirumala Temple. Tirumala Tirupati Davasthanams. பக். 204. https://books.google.com/books?id=aKEcAAAAMAAJ&q=tiruchanda+viruttam.
- ↑ Temples of Kr̥ṣṇa in South India: History, Art, and Traditions in Tamilnāḍu. 2002. https://books.google.com/books?id=pzgaS1wRnl8C&dq=tiruchanda+viruttam&pg=PA48.
- ↑ Makarand Joshi. Tiruccanda Viruttam Of Tirumalisai Alvar English Translation And Notes By BSS Iyengar. பக். 38. http://archive.org/details/tiruccandaviruttamoftirumalisaialvarenglishtranslationandnotesbybssiyengar.
- ↑ "முதல் ஆயிரம் திருமழிசை ஆழ்வார் திருச்சந்த விருத்தம்". https://www.tamilvu.org/slet/l4210/l4210son.jsp?subid=3775.
- ↑ Manavalan, A. A. (2022-03-28) (in en). Ramayana: A Comparative Study of Ramakathas. Global Collective Publishers. பக். 97. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-954021-78-5. https://books.google.com/books?id=dsZuEAAAQBAJ&dq=thiruchanda+virutham&pg=PT97.
- ↑ "முதல் ஆயிரம் திருமழிசை ஆழ்வார் திருச்சந்த விருத்தம்". https://www.tamilvu.org/slet/l4210/l4210son.jsp?subid=3775.