திருக்குறையலூர் உக்ர நரசிம்மபெருமாள் கோயில்

திருக்குறையலூர் உக்ர நரசிம்மபெருமாள் கோயில் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள அமைந்துள்ள வைணவக்கோயிலாகும்.

அமைவிடம்

இக்கோயில் திருநகரியிலிருந்து பூம்புகார் செல்லும் சாலையில் மங்கைமடத்திற்கு முன்பாக அமைந்துள்ளது.


இறைவன், இறைவி

உக்ரசிம்மப்பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் கருவறையில் உள்ளார். இறைவன் வெள்ளிக்கவசம் அணிந்து சாளக்ராம மாலையுடன் கம்பீரமாக அமர்ந்த கோலத்தில் காணப்படுகின்றார். [1]

பிற சிறப்புகள்

பஞ்ச நரசிம்மத்தலங்களில் முதல் தலமாகும். திருமங்கை மன்னனும் அவரது தேவியான குமுதவல்லியும் இக்கோயிலில் உள்ளனர். திருமங்கையாழ்வார் அடியார்க்ளுக்கு அன்னதானம் செய்த சிறப்பினைப் பெற்ற தலமாகும். இக்கோயிலுக்கு அருகே திருநாங்கூரைச் சேர்ந்த 11 திவ்யதேசங்களும், மங்கைமடம் வீரநரசிம்மப்பெருமாள் கோயிலும் உள்ளன. [1]

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 திருக்கோயில்கள் வழிகாட்டி, நாகப்பட்டினம் மாவட்டம், தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை, 2014