திருக்காழிச்சீராம விண்ணகரம் தாடாளன் கோயில்

திருக்காழிச்சீராம விண்ணகரம் தாடாளன் (திரிவிக்கிரம நாராயணர்) திருக்கோயில் 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்று. இத்திருத்தலம் சீர்காழியில் அமைந்துள்ளது. உரோமச முனிவர் தவமிருந்து பெருமாளின் திரிவிக்கிரம அவதாரக் காட்சி கண்ட திருத்தலம்.

ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப் பெற்ற
திருக்காழிச்சீராம விண்ணகரம் தாடாளன் (திரிவிக்கிரம நாராயணர், திரிவிக்கிரமன்) திருக்கோயில்[1]
புவியியல் ஆள்கூற்று:11°14′27″N 79°43′54″E / 11.240845°N 79.731605°E / 11.240845; 79.731605
பெயர்
புராண பெயர்(கள்):காழிச்சீராம விண்ணகரம், பாடலிகவனம்
பெயர்:திருக்காழிச்சீராம விண்ணகரம் தாடாளன் (திரிவிக்கிரம நாராயணர், திரிவிக்கிரமன்) திருக்கோயில்[1]
அமைவிடம்
ஊர்:சீர்காழி
மாவட்டம்:நாகப்பட்டினம்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:திரிவிக்கிரம நாராயணர் (நின்ற திருக்கோலம்)
உற்சவர்:தாடாளன்
தாயார்:லோகநாயகி
தல விருட்சம்:பலா
தீர்த்தம்:சங்க தீர்த்தம், சக்கர தீர்த்தம்
மங்களாசாசனம்
பாடல் வகை:நாலாயிரத் திவ்யப்பிரபந்தம்
மங்களாசாசனம் செய்தவர்கள்:ஆண்டாள், திருமங்கையாழ்வார்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கல்வெட்டுகள்:உண்டு

தலவரலாறு

மூலவர் திரிவிக்கிரமராக இடது காலைத் தலைக்கு மேல் தூக்கியபடியும் வலது கையை தானம்பெற்ற கோலத்திலும் இடக்கையை அடுத்த அடி எங்கே என ஒரு விரலைத் தூக்கியபடியும் அமைந்துள்ளார்.

உற்சவர் தாடாளன் வைகுண்ட ஏகாதசியன்று மட்டுமே காட்சி தருகின்றார்.

சிறப்பு

திரிவிக்கிரம கோலத்தில் பெருமாள் ஒருபாதத்தை உயரத் தூக்கியபோது, பாதம் நோகுமே என்று அவரை பதக்கமாகத் தாயார் தாங்குவதாக மரபு. இத்திருத்தல தாயார் தரிசனம் காணும் பெண்கள் கணவரிடம் அன்பு காட்டுவர் என்பது தொன்நம்பிக்கை.

திருமங்கையாழ்வார் வேல் பெற்ற திருத்தலம்

திருமங்கையாழ்வாருக்கும் திருஞானசம்பந்தருக்கும் இடையேயான வாதப்போட்டியில் ஆழ்வார் வெற்றி பெற்றதால், திருமங்கையாழ்வாரைப் பாராட்டி தமது வேலை திருஞானசம்பந்தர் அளித்த திருத்தலம். திருவாழி - திருநகரி திருத்தலத்தில் இந்த வேலை வைத்தபடி திருமங்கையாழ்வார் காட்சி தருகிறார்.

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்