திருக்கண்டலம் சிவாநந்தீஸ்வரர் கோயில்
திருக்கண்டலம் சிவாநந்தீஸ்வரர் கோயில் (சிவானந்தேஸ்வரர் கோயில்) திருஞானசம்பந்தரால் தேவாரம் பாடல் பெற்ற தொண்டை நாட்டுச் சிவாலயமாகும். இச்சிவாலயத்தின் மூலவர் சிவாநந்தீஸ்வரர். தாயார் ஆனந்தவல்லி. இத்தல இறைவனார் சுயம்பு மூர்த்தி. இத்தலம் பிருகு முனிவர் வழிபட்ட திருத்தலம்.[1] இது பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றாகும்.[2]
தேவாரம் பாடல் பெற்ற திருக்கள்ளில் சிவாநந்தீஸ்வரர் கோயில் | |
---|---|
பெயர் | |
புராண பெயர்(கள்): | திருக்கள்ளில் |
பெயர்: | திருக்கள்ளில் சிவாநந்தீஸ்வரர் கோயில் |
அமைவிடம் | |
ஊர்: | திருக்கண்டலம் (திருக்கள்ளம்) |
மாவட்டம்: | திருவள்ளூர் |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | சிவாநந்தீஸ்வரர், சிவானந்தேஸ்வரர் |
உற்சவர்: | சோமாஸ்கந்தர், |
தாயார்: | ஆனந்தவல்லி |
தல விருட்சம்: | கள்ளி |
தீர்த்தம்: | நந்தி தீர்த்தம் |
ஆகமம்: | காரணாகமம் |
சிறப்பு திருவிழாக்கள்: | திருக்கார்த்திகை, மகா சிவராத்திரி, திருவாதிரை, கந்த சஷ்டி. |
பாடல் | |
பாடல் வகை: | தேவாரம் |
பாடியவர்கள்: | திருஞானசம்பந்தர் |
வரலாறு | |
தொன்மை: | புராதனக்கோயில் |
தல வரலாறு
சிவபெருமான் தன்னுடைய திருமணத்தினால் வடநிலம் உயர்ந்து, தென்நிலம் தாழ்வதை தவிர்க்க அகத்தியரை தென்நிலப்பகுதிக்கு அனுப்பினார். அகத்தியர் சிவபெருமானின் திருமணத்தினைக் காண இயலாமல் போவது குறித்து வருந்தியமையால், விரும்பும் இடங்களிலெல்லாம் திருமணக் கோலத்தில் காட்சி தருவதற்கு சிவபெருமான் வரம் தந்தார்.
திருக்கண்டலம் பகுதியில் அகத்தியருக்கு திருமணக் கோலத்திலும், முருகப்பெருமான் மற்றும் உமையம்மையுடன் சோமாஸ்கந்தராகவும் காட்சியளித்தார்.
தல பெருமை
- இச்சிவாலயத்தில் உள்ள தட்சிணாமூர்த்தி ஆதிசக்தியுடன் உள்ளார். அதனால் சக்தி தெட்சிணாமூர்த்தி என்று அழைக்கப்படுகிறார்.
அமைவிடம்
இச்சிவத்தலம் இந்தியா தமிழ்நாடு மாநிலம் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருக்கண்டலம் எனும் ஊரில் அமைந்துள்ளது.
இவற்றையும் பார்க்க
ஆதாரங்களும் மேற்கோள்களும்
வெளி இணைப்புகள்
அருள்மிகு சிவாநந்தீஸ்வரர் திருக்கோயில் - தினமலர் கோயில்கள் தளம்