திருக்கச்சிஅனேகதங்காவதம்

திருக்கச்சிஅனேகதங்காவதம் அனேகபேசுவரர் கோயில் காஞ்சிபுரத்தில் உள்ள சுந்தரரால் பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். [2]

தேவாரம் பாடல் பெற்ற
திருக்கச்சிஅனேகதங்காவதம் அனேகபேசுவரர் கோயில்
பெயர்
புராண பெயர்(கள்):திருக்கச்சிஅனேகதங்காவதம், கச்சி அனேகதங்காவதம்
பெயர்:திருக்கச்சிஅனேகதங்காவதம் அனேகபேசுவரர் கோயில்
அமைவிடம்
ஊர்:காஞ்சிபுரம்
மாவட்டம்:காஞ்சிபுரம்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு: இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:அனேகதங்காவதேஸ்வரர், அனேகபேஸ்வரர்[1]
பாடல்
பாடல் வகை:தேவாரம்
பாடியவர்கள்:சுந்தரர்

தல வரலாறு

அனேகதம் என்றால் யானை என்று பொருள். யானை முகம் கொண்ட விநாயகப்பெருமானால் அமைக்கப்பட்டு வழிபடப்பட்ட திருத்தலம் என்ற பொருளில் அனேகதங்காபதம் என்றும், இதே பெயர் கொண்ட இமயமலையைச் சார்ந்த வட நாட்டுத் திருக்கோயிலிலிருந்து வேறுபடுத்தி அறிய கச்சி சேர்க்கப்பட்டு கச்சி அனேகதங்காவதம் என்றும் அழைக்கப்பட்டது. குபேரன் வழிபட்ட திருத்தலம். காஞ்சி புராணத்தில் இத்திருக்கோயில் பற்றிய குறிப்புகள் உள்ளன.

அமைப்பு

கோயிலின் முன்பாக குளம் உள்ளது. சிறிய வாயிலைக் கடந்து உள்ளே செல்லும்போது கோயிலின் சன்னதி முன்பாக பலிபீடம், நந்தி மண்டபம் ஆகியவை உள்ளன. கோஷ்டத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, விஷ்ணு, பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். திருச்சுற்றில் நால்வர் சன்னதி, விநாயகர் சன்னதி, வள்ளி தெய்வானையுடன் சுப்ரமணியர் சன்னதி, சண்டிகேஸ்வரர் சன்னதி ஆகியோரின் சன்னதிகள் உள்ளன.

அமைவிடம்

காஞ்சிபுரத்தின் பழைமையான கைலாசநாதர் கோயில் செல்லும் வழி

மேற்கோள்கள்

  1. http://www.shaivam.org/siddhanta/sp/spt_p_kacci_anekatangavadam.htm
  2. பு.மா.ஜெயசெந்தில்நாதன், திருமுறைத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009

படத்தொகுப்பு