தியாக பூமி (திரைப்படம்)

தியாக பூமி 1939 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. சுப்பிரமணியம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. கே. பட்டம்மாள், வத்சலா ஆகியோர் பாடல்களைப் பாடியிருந்தனர். இப்படத்தின் கதையானது கல்கி எழுதிய தியாகபூமி புதினத்தை அடிப்படையாக கொண்டது.

தியாக பூமி
இயக்கம்கே. சுப்பிரமணியம்
தயாரிப்புகே. சுப்பிரமணியம்
எம். யு. ஏ. சி
கதைகல்கி
இசைமோதி பாபு குழுவினர்
வெளியீடுமே 20, 1939
நீளம்17000 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்


நடிகர்கள்

நடிகர் பாத்திரம்
பாபநாசம் சிவன் சம்பு சாஸ்திரி
கே. ஜே மகாதேவன் சிறீதரன்
ஜாலி கிட்டு ஐயர் ராஜாராமையர்
பி. ஆர். இராஜகோபாலய்யர் நல்லான்
சேலம் சுந்தர சாஸ்திரி தீட்சிதர்
எஸ். இராமச்சந்திர ஐயர் மேயர்
கோமாளி சாம்பு செவிட்டு வைத்தி
எஸ். ஏ. அய்யர் (இலங்கை) நீதிபதி
எஸ். டி. சுப்புலட்சுமி சாவித்திரி
பேபி சரோஜா சாரு
கே. எஸ். லலிதா ராதா
கே. என். கமலம் மங்களம்

பாடல்கள்

தியாக பூமி திரைப்படத்தில் 17 பாடல்கள் இடம்பெற்றிருந்தன.[1] மோதி பாபு குழுவினர் பாடல்களுக்கு இசையமைத்திருந்தனர்.[1]

பாடல் பாடியவர்(கள்) இராகம்-தாளம் குறிப்பு
பாரத புண்ய பூமி - ஜெயபாரத புண்யபூமி டி. கே. பட்டம்மாள் குந்தளவராளி - ஆதி முகப்புப் பாடல்
ஸ்ரீ ராமபத்ரா பாபநாசம் சிவன் & குழுவினர் மாண்டு - ஆதி
பட்டாஸ் பட்டாஸ் பாரீர் பாரீர் எஸ். டி. சுப்புலட்சுமி சலோ சலோ மெட்டு
துன்புறவே எனைப் படைத்த எஸ். டி. சுப்புலட்சுமி பியாக் தொகையறா
பிறவி தனிலே சூதினமிதே எஸ். டி. சுப்புலட்சுமி அஜபசுரத் மெட்டு
ஸ்ரீ ஜக தம்பிகையே தீன தயாபரி சங்கரி பாபநாசம் சிவன் லதாங்கி - ரூபகம்
நவ சித்தி பெற்றாலும் சிவ பக்தி இல்லாத பாபநாசம் சிவன் கரகரப்பிரியா - சாப்பு நீலகண்ட சிவன் கீர்த்தனை
சுருங்கார லகரி பாபநாசம் சிவன் நீலாம்புரி - ஆதி
தேடித் தேடி அலைந்தேனே பாபநாசம் சிவன் செஞ்சுருட்டி - ஆதி
வாழும் மனை உடல் ஆடை பாபநாசம் சிவன் விருத்தம்
கிருஷ்ணா நீ வேகமாய் வாராய் வத்சலா யமன் கல்யாணி - மிச்ரம் நடனம்[2]
உறவே பிரிந்தோமே நாமே வத்சலா இந்துத்தானி நடனம்
ஜெய ஜெய ஜெய தேவி எஸ். டி. சுப்புலட்சுமி, பேபி சரோஜா இந்துத்தானி மெட்டு
சாகே தாதிப ராமா ராம விபோ மீராகோப்ரபு மெட்டு
தேச சேவை செய்ய வாரீர் டி. கே. பட்டம்மாள் இந்துத்தானி மெட்டு[3]
சொல்லு காந்தி தாத்தாவுக்கு ஜே ஜே ஜே பேபி சரோஜா இந்துத்தானி மெட்டு
பந்தமகன்று நம் திருநாடு உய்த்திட வேண்டாமோ டி. கே. பட்டம்மாள் இந்துத்தானி மெட்டு[4]

மேற்கோள்கள்

உசாத்துணை

"https://tamilar.wiki/index.php?title=தியாக_பூமி_(திரைப்படம்)&oldid=34059" இருந்து மீள்விக்கப்பட்டது