திமிரி ஊராட்சி ஒன்றியம்
திமிரி ஊராட்சி ஒன்றியம் , இந்தியாவின் தமிழ்நாட்டின் இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள எட்டு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] திமிரி ஊராட்சி ஒன்றியம் ஐம்பத்தி ஐந்து ஊராட்சி மன்றங்களை கொண்டுள்ளது. ஆற்காடு வட்டத்தில் உள்ள இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் திமிரியில் இயங்குகிறது.
மக்கள் வகைப்பாடு
2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, திமிரி ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,05,691 ஆகும். அதில் பட்டியல் சமூக மக்களின் தொகை 29,924 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 1,104 ஆக உள்ளது.[2]
ஊராட்சி மன்றங்கள்
திமிரி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 55 கிராம ஊராட்சி மன்றங்களின் விவரம்;[3]
- அகரம்
- அல்லாளச்சேரி
- ஆரூர்
- அத்தியானம்
- ஆனைமல்லூர்
- ஆயிரமங்கலம்
- தாமரைப்பாக்கம்
- தோணிமேடு
- துர்கம்
- குண்டலேரி
- இருங்கூர்
- கனியனூர்
- காவனூர்
- கலவைபுத்தூர்
- குப்பம்
- குப்பிடிச்சாத்தம்
- குட்டியம்
- மழையூர்
- மாம்பாக்கம்
- மாந்தாங்கல்
- மேலத்தாங்கல்
- மேலப்பழந்தை
- மேல்நெல்லி
- மேல்நாய்க்கன்பாளையம்
- மோசூர்
- நம்பரை
- நல்லூர்
- நாகலேரி
- மேல்நேத்தபாக்கம்
- பரதராமி
- பரிக்கல்பட்டு
- பழையனூர்
- பட்டணம்
- பாளையம்
- பாலி
- பாரியமங்கலம்
- பெருமாந்தாங்கல்
- பின்னத்தாங்கல்
- பென்னகர்
- புங்கனூர்
- புதூர்
- மேல்புதுப்பாக்கம்
- செங்கனாவரம்
- சென்னசமுத்திரம்
- செய்யாத்துவண்ணம்
- சிட்டந்தாங்கல்
- சொரையூர்
- வளையாத்தூர்
- வனக்கம்பாடி
- வரகூர்
- வாழைப்பந்தல்
- வெள்ளம்பி
- வேம்பி
- வெங்கடாபுரம் ஊராட்சி
- விலாரி