திபு நினன் தாமஸ்

திபு நினன் தாமசு (Dhibu Ninan Thomas) என்பவர் புகழ்பெற்ற தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். இவர் பின்னணி மற்றும் பாடல்களுக்கு இசை அமைத்துள்ளார். மலையாள, தெலுங்கு மறு ஆக்கம் செய்யப்பட்ட படங்களிலும் பணி செய்துள்ளார். கனா திரைப்படத்தில் சவால் பாடலை பாடினார்.

திபு நினன் தாமசு
Dhibu Film Composer.jpg
பின்னணித் தகவல்கள்
பிற பெயர்கள்திபு
இசை வடிவங்கள்திரை பின்னணி இசை, பாடல் இசை
தொழில்(கள்)
இசைக்கருவி(கள்)பியானோ, வோகல்ஸ், தாளங்கள்
இசைத்துறையில்2017– தற்போது
வெளியீட்டு நிறுவனங்கள்
  • திங்க் மியூசிக்
  • சோனி மியூசிக்

இவர் திருச்சிராப்பள்ளி ஜே. ஜே. பொறியியல் கல்லூரியில் இளநிலை பொறியியல் கல்வியினைப் படித்துள்ளார்.[1]

திரைதுறை

ஏ. ஆர். கே. சரவணன் எழுதி இயக்கிய மரகத நாணயம் திரைப்படத்தில் முதல் முறையாக இசை அமைத்துள்ளார். இப்படம் 2017ஆம் ஆண்டு வெளிவந்து பாடல்கள் நல்ல வரவேற்பு பெற்றது. முக்கிய வேடங்களில் ஆதி, நிக்கி கல்ராணி நடித்திருந்தனர்.[2] இப்படம் தெலுங்கில் மரகதமணி என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ளது.[3] இத்திரைப்படம் சிறந்த படமாக மக்களிடையே விமர்சனங்களைப் பெற்றுள்ளது.

2018இல் கனா திரைப்படம், மட்டைப்பந்து மற்றும் விவசாயம்[4] பற்றிய ஒரு தமிழ் திரைப்படமாக வெளியானது. இப்படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்து[5] அருண்ராஜா காமராஜ் எழுதி இயக்கியிருந்தார்.[6][7] இப்படத்தின் பாடல்கள் பெரிய அளவில் மக்களால் விரும்பப்பட்டது. இசையமைப்பாளர் திபு சவால் என்ற பாடலை பாடி பாடகராகவும் தன்னை பதிவு செய்தார்.

திரையிசை

இசையமைப்பாளராக

ஆண்டு தமிழ் மற்ற மொழிகளில் மொழிமாற்றம் குறிப்பு
2017 மரகத நாணயம் (திரைப்படம்) மரகதமணி (தெலுங்கு)
ஜக்காரியா போத்தன் ஜீவிச்சிரிப்பூண்டு (மலையாளம்)
2018 கனா
2019 கவுசல்யா கிருஷ்ணமூர்த்தி (தெலுங்கு) கனா தெலுங்கு மறுஆக்கம்
2021 பேச்சுலர் அடியே பாடல் மட்டும்
2022 கொம்பு வைச்ச சிங்கம்டா[8]
நெஞ்சுக்கு நீதி (2022 திரைப்படம்)[9] தமிழ் மறுஆக்கம் Article 15
நதி
2023 சித்தா
டீசல் படப்பிடிப்பில்
அஜயந்தே ரண்டம் மோஷனம் (மலையாளம்)

பாடகராக

  • "சவால்" - கனா

மேற்கோள்கள்

  1. Vasudevan, Kv (22 June 2017). "Dhibu's desi flavour" இம் மூலத்தில் இருந்து 12 November 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20201112025207/https://www.thehindu.com/entertainment/movies/dhibu-ninan-thomas-maragadha-naanayam/article19124938.ece. பார்த்த நாள்: 31 March 2019. 
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2017-03-25 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170325130219/http://reviewrating.org/maragadha-naanayam-teaser-released-aadhi-nikki-galrani/. 
  3. http://www.123telugu.com/reviews/marakathamani-telugu-movie-review.html
  4. "Kabali lyricist Arunraja Kamaraj to direct movie on women’s cricket, real players to give insight". https://indianexpress.com/article/entertainment/tamil/kabali-lyricist-arunraja-kamaraj-to-direct-movie-on-womens-cricket-real-players-to-give-insight4828250. 
  5. "Sivakarthikeyan turns producer for friend Arunraja Kamaraj's debut" (in en). https://www.indiatoday.in/movies/regional-cinema/story/sivakarthikeyan-turns-producer-with-arun-raja-kamaraj-debut-film-1172949-2018-02-19. 
  6. "Release Date Of Sivakarthikeyan's Next Is Here!". https://www.behindwoods.com/tamil-movies-cinema-news-16/kanaa-release-date-announced-officially.html. 
  7. "Sivakarthikeyan turns producer for Arunraja Kamaraj’s film". https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/sivakarthikeyan-turns-producer-for-arunraja-kamarajs-film/articleshow/62994591.cms. 
  8. "First Look of Kombu Vecha Singamda: Sasikumar looks fierce in this glimpse from the film". 17 January 2019 இம் மூலத்தில் இருந்து 31 March 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190331154233/https://www.timesnownews.com/entertainment/south-gossip/article/first-look-of-kombu-vecha-singamda-sasikumar-looks-fierce-in-this-glimpse-from-the-film/349048. பார்த்த நாள்: 31 March 2019. 
  9. "Breaking: Udhayanidhi Stalin's Article 15 Remake Has This Magical Combo Reuniting Again – Check Out the Fantastic Update!". 13 September 2021 இம் மூலத்தில் இருந்து 28 October 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20211028165917/https://www.behindwoods.com/tamil-movies-cinema-news-16/breaking-udhayanidhi-stalins-article-15-remake-has-this-magical-combo-reuniting.html. 

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=திபு_நினன்_தாமஸ்&oldid=8577" இருந்து மீள்விக்கப்பட்டது