தினகரன் (இலங்கை)
தினகரன் இலங்கையின் தலைநகர் கொழும்பில் இருந்து வெளியாகும் ஒரு தேசியத் தமிழ் நாளிதழ் ஆகும். இப்பத்திரிகை 1932 ஆம் ஆண்டு மார்ச் 15 ஆம் நாள் அன்று முதன் முதலாக வெளியிடப்பட்டது. இலங்கையின் முன்னணி வெளியீட்டு நிறுவனமான லேக் ஹவுஸ் நிறுவனம் இதனை வெளியிட்டு வருகிறது. 1948 மே 23 முதல் தினகரன் வாரமஞ்சரி ஞாயிற்றுக்கிழமைகளில் வெளியானது.[1]
வகை | நாளிதழ் |
---|---|
வடிவம் | அகலப்பக்கம் |
உரிமையாளர்(கள்) | லேக் ஹவுஸ் |
நிறுவியது | மார்ச் 15, 1932 |
மொழி | தமிழ் |
தலைமையகம் | கொழும்பு, இலங்கை |
இணையத்தளம் | thinakaran.lk |
தினகரன் பத்திரிகையின் முதலாவது ஆசிரியராக கே. மயில்வாகனம் பணியாற்றினார். அவருக்குப் பின்னர் வி. ராமநாதன், எஸ். ஈஸ்வர ஐயர், எஸ். கிருஷ்ண ஐயர், ரி. எஸ். தங்கையா, வீ. கே. பீ. நாதன், பேராசிரியர் க. கைலாசபதி, ஆர். சிவகுருநாதன் ஆகியோர் ஆசிரியர்களாக இருந்தனர்.
தகவல்கள்
- பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை அவர்களுக்கு பண்டிதமணி என்ற பட்டத்தை அளித்து கெளரவப்படுத்தியது தினகரன்.
- 1959 ஆம் ஆண்டில் பேராசிரியர் க. கைலாசபதி காலத்தில் கொழும்பில் மாபெரும் முத்தமிழ் விழாவை நடத்தியது. இவ்விழாவில் பேராசிரியர் தெ. பொ. மீனாட்சிசுந்தரம், எழுத்தாளர் அகிலன், நடிகர் சிவாஜி கணேசன் போன்றவர்கள் கலந்து கொண்டனர்.
மேற்கோள்கள்
- ↑ "Remarkable enents". Ferguson's Ceylon Directory, Colombo. 1949.