திண்டுக்கல் ஐ. லியோனி

திண்டுக்கல் ஐ. லியோனி (ஆங்கிலம்: Dindigul I. Leoni) என்பவர் ஆசிரியர், மேடைப் பேச்சாளர், இலக்கியச் சொற்பொழிவாளர், நகைச்சுவை பட்டிமன்ற நடுவர். இவர் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவராகவும் உள்ளார்.[2] இவர் திண்டுக்கல் மாவட்டத்தைச் சார்ந்தவர். கிறித்துவ மதத்தை பின்பற்றுபவர். இவர் கங்கா கௌரி என்ற திரைப்படமொன்றில் நடித்துள்ளார். இவருக்கு 2010-ம் ஆண்டிற்கான கலைமாமணி விருது வழங்கப்பட்டது.

திண்டுக்கல் ஐ. லியோனி
Dindigul I. Leoni
திண்டுக்கல் ஐ. லியோனி.jpg
தாய்மொழியில் பெயர்திண்டுக்கல் ஐ. லியோனி
பிறப்பு22 நவம்பர் 1954 (1954-11-22) (அகவை 70)
திண்டுக்கல், தமிழ் நாடு, இந்தியா
பணிஆசிரியர், பேச்சாளர், அரசியல்வாதி
செயற்பாட்டுக்
காலம்
1997, 2020
தொலைக்காட்சிகலைஞர் தொலைக்காட்சி
பட்டம்கலைமாமணி
அரசியல் கட்சிதிராவிட முன்னேற்றக் கழகம்
வாழ்க்கைத்
துணை
பாண்டியம்மாள்.[1]
மற்றும்
அமுதா
பிள்ளைகள்அகலியா
சிவக்குமார்
சதீசு குமார்
உறவினர்கள்சி. எஸ். அமுதன்
(மருமகன்)

ஆசிரியப் பணி

இவர் திண்டுக்கல் புனித மரியன்னை மேனிலைப் பள்ளியில் ஆசிரியராக இருந்தார்.

அரசியல் வாழ்க்கை

இவர் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்தவர். 2011-ம் ஆண்டு திமுகவை ஆதரித்து தேர்தல் பிரச்சாரத்திலும் ஈடுபட்டார்.[3] 2014-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும்[4], 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலிலும் திமுகவை[5] ஆதரித்து பிரச்சாரம் செய்தார்.[6][7]

குறிப்புகள்

  1. திண்டுக்கல் லியோனி மற்றும் அவரது மனைவி பாண்டியம்மாள் அவர்களின் படிமம். தீ இந்து. 4 நவம்பர் 2008. {{cite book}}: Check date values in: |date= (help)
  2. தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் புதிய தலைவராக திண்டுக்கல் ஐ.லியோனி நியமனம். இந்து தமிழ் திசை. 7 சூலை 2021.
  3. திண்டுக்கல் ஐ. லியோனியின் தேர்தல் பிரச்சார காணொளி, பார்த்த நாள், 14, ஏப்ரல், 2012.
  4. குள.சண்முகசுந்தரம். "அம்மா பிரதமரானால் எதிர்க்கட்சி மாப்ளைங்க வாலைச் சுருட்டிக்கணும்: திண்டுக்கல் ஐ.லியோனி பேட்டி". தி இந்து. பார்க்கப்பட்ட நாள் மே 26, 2016.
  5. "திமுக ஆட்சியில்தான் விழுப்புரம் வளர்ச்சி: திண்டுக்கல் ஐ.லியோனி". தினமணி. பார்க்கப்பட்ட நாள் மே 26, 2016.
  6. "110 விதியின் கீழ் அறிவித்தவற்றை ஜெயலலிதா செயல்படுத்தவில்லை: திண்டுக்கல் ஐ.லியோனி குற்றச்சாட்டு". தி இந்து. பார்க்கப்பட்ட நாள் மே 26, 2016.
  7. "வைகோ செய்த துரோகம்? திண்டுக்கல் ஐ லியோனி ஆவேசம்". வெப்துனியா. பார்க்கப்பட்ட நாள் மே 26, 2016.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=திண்டுக்கல்_ஐ._லியோனி&oldid=26187" இருந்து மீள்விக்கப்பட்டது