திட்டமிட்ட சிங்கள குடியேற்றம்
திட்டமிட்ட சிங்கள குடியேற்றம் எனப்படுவது இலங்கை சிங்கள பெரும்பான்மை அரசுகள் தமிழர்களின் மரபுவழித் தாயகப் நிலப்பரப்புகளில் தமிழர்களின் மரபுவழி உரிமைகளைச் சிதைக்கும் வண்ணம் திட்டமிட்டு மேற்கொண்ட சிங்கள குடியேற்றங்களைக் குறிக்கின்றது. இந்த திட்டங்கள் நிலமற்ற சிங்களவர்களுக்கு நிலம் தரும் திட்டங்களாக அரசால் பரப்புரை செய்யப்பட்டாலும், அங்கு வாழ்ந்த தமிழர்களின் உரிமைகளை கருத்துக்களை பொருட்படுத்தாமல் இந்த திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. இது இலங்கை இனப்பிரச்சினைக்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்தது.