திகன {Digana) இலங்கையில் உள்ள ஒரு கிராமம். இது மத்திய மாகாணத்தில் கண்டிக்கும் தெல்தெனியவுக்கும் இடையில் ஏ-26 நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இவ்வூர் டொலமைட் கனிமத்திற்கு பெயர் பெற்றது. பரோபகாரி அசீசு முகம்மத் ரவுஃப் இலங்கைக்கு டொலமைட்டை அறிமுகப்படுத்தினார். திகனவில் பல டொலமைட் தொழிற்சாலைகள் உள்ளன.

திகன
நகரம்
Digana country side 2.jpg
திகன is located in இலங்கை
திகன
திகன
இலங்கையில் அமைவிடம்
ஆள்கூறுகள்: Coordinates: 7°17′47″N 80°44′00″E / 7.296494°N 80.733417°E / 7.296494; 80.733417
நாடுஇலங்கை
மாகாணம்மத்திய மாகாணம்
மாவட்டம்கண்டி மாவட்டம்

தெல்தெனிய விக்டோரியா அணை கட்டப்பட்ட போது நீரில் மூழ்கியதால் அதன் அனைத்து அயலகங்களுக்கும் பிரபலமான மாற்று நகரமாகத் திகன மாறியது. இங்கு சுமார் 2000 குடும்பங்களைச் சேர்ந்த பல இன சமூகத்தினர் வாழ்கின்றனர்.

2018 மார்ச்சு மாதத்தில் இங்குள்ள முசுலிம்களுக்குச் சொந்தமான வீடுகளும் விற்பனை நிலையங்களும், பள்ளிவாசல் ஒன்றும் தாக்கப்பட்டதில் இங்கு இனக்கலவரம் மூண்டது.[1]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=திகனை&oldid=38871" இருந்து மீள்விக்கப்பட்டது