தாமோதரனார்

தாமோதரனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். தாமோதரன் - உலகம் எல்லாம் இறைவன் மஹாவிஷ்ணுவின் திருவுந்தியில் அடங்கியதால் தாமோதரன் என்றும் யசோதை கட்டிய தாம்புக்கயிறு இடுப்பில் அழுந்தியதால் தாமோதரன் என்றும் இவரது பெயருக்கான விளக்கம்.இவரது பாடல் ஒன்றே ஒன்று மட்டும் சங்கப்பாடல் தொகுப்பில் உள்ளது. அது குறுந்தொகை 92 எண் கொண்ட பாடல்.[1]

குறிந்தொகை 92 பாடலில் சொல்லப்படும் செய்திகள்

  • நெய்தல் திணை

ஞாயிறு மறைந்த பொழுது பறவைகள் தம் குஞ்சுகள் இருக்கும் இடத்துக்குக் குஞ்சுகளுக்கு வேண்டிய இரையுடன் சென்று அடையும். (அதுபோல அவர் இல்லம் வந்து சேரவேண்டும் என்பது தலைவியின் ஏக்கம்.)

  • இதனைக் காமம் மிக்க கழிபடர் கிளவி என்பர். அவன்மீது உள்ள இடையறா ஆசையால் அவன் நினைவாகவே இருப்பதுதான் இது.

அரிய சொல்லாட்சி

'இறையுற ஓங்கிய ... மராஅம்' = வானளாவ ஓங்கிய மரா மரம்.
இறை = உயர்ந்தவன்

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=தாமோதரனார்&oldid=12492" இருந்து மீள்விக்கப்பட்டது