தாமரைச்செல்வி
தாமரைச்செல்வி | |
---|---|
தேசியம் | இலங்கைத் தமிழர் |
அறியப்படுவது | ஈழத்து எழுத்தாளர் |
தாமரைச்செல்வி ஈழத்தின் பெண் எழுத்தாளர்களுள் குறிப்பிடத்தக்க ஒருவர். 1973 முதல் சிறுகதைகளையும் புதினங்களையும் எழுதிவரும் தாமரைச்செல்வி 2006 வரை ஒன்பது நூல்களை வெளியிட்டுள்ளார். இவருக்கு இலங்கையின் தேசிய சாகித்திய விருது கிடைத்துள்ளது.
தாமரைச்செல்வியின் ‘இன்னொரு பக்கம்’ என்ற சிறுகதை, இலங்கை கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தின் தரம் 11 ‘தமிழ்மொழியும் இலக்கியமும்’ என்ற பாடநூலில் 2015 ஆம் ஆண்டுமுதல் சேர்க்கப்பட்டுள்ளது.
வாழ்க்கைக் குறிப்பு
தாமரைச்செல்வி கிளிநொச்சி மாவட்டத்தில் பரந்தனிலுள்ள குமரபுரம் என்ற ஊரைச் சேர்ந்தவர். தமது ஆரம்பக்கல்வியை பரந்தன் இந்து மகா வித்தியாலயத்திலும், பின்னர் யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியிலும் தொடர்ந்தார்.[1]
இவருடைய ஆக்கங்கள்
புதினங்கள்
- சுமைகள்
- தாகம்
- வீதியெல்லாம் தோரணங்கள்
- பச்சை வயல் கனவு (ஓகஸ்ட், 2004)
சிறுகதைத் தொகுதிகள்
- மழைக்கால இரவு
- அழுவதற்கு நேரமில்லை
- வன்னியாச்சி (2005)
மேற்கோள்கள்
- ↑ முருகபூபதி, லெ. (21 அக்டோபர் 2015). "திரும்பிப்பார்க்கின்றேன்: தாமரைக்கு ஒரு செல்வி வன்னிமக்களுக்கு ஒரு வன்னியாச்சி. ஈழத்து இலக்கிய வளர்ச்சியில் போர்க்கால இடப்பெயர்வு வாழ்வை அழுத்தமாகப் பதிவுசெய்த ஆளுமை". பதிவுகள் இம் மூலத்தில் இருந்து 2016-03-05 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160305004217/http://www.geotamil.com/pathivukalnew/index.php?option=com_content&view=article&id=2937:2015-10-22-02-37-04&catid=52:2013-08-19-04-28-23&Itemid=68. பார்த்த நாள்: 24 அக்டோபர் 2015.
வெளி இணைப்புகள்
[நூலகம்]
- தாமரைச்செல்வியின் ‘சுமைகள்” கருணாகரண்
- பெண்ணின் கலாசாரம் தாமரைச்செல்வி