தாமரைக்குளம் சீலக்காரியம்மன் கோயில்

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகிலுள்ள தாமரைக்குளம் எனும் ஊரில் வாணியர் சாதியினருக்கான சீலக்காரியம்மன் கோயில் அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கோயிலில் சீலக்காரியம்மன் முதன்மை தெய்வமாகவும், பத்ரகாளி,marudhuvar selaikAri , am.a கணபதி, முருகன், பைரவர் போன்ற தெய்வங்களுக்கும் சிலைகள் உள்ளன.

தாமரைக்குளம் சீலக்காரியம்மன் மற்றும் பத்ரகாளியம்மன் சிலை

வாணியர் குல தெய்வம்

 
தாமரைக்குளம் சீலக்காரியம்மன் கோயில் முகப்பு

சில நூற்றாண்டுகளுக்கு முன்பு கணவனை இழந்த பெண்கள் இறந்த கணவன் உடன் அழிக்கப்படும் சிதையில் உடன்கட்டை ஏறி உயிர்விடும் வழக்கம் இருந்து வந்தது. இப்படி உடன்கட்டை ஏறிய சில பெண்கள் தெய்வங்களாக இருந்து அந்தக் குடும்பத்தைக் காப்பாற்றுவதாக ஒரு நம்பிக்கை அன்றைய மக்களிடையே இருந்து வந்தது. இப்படி காக்கும் பெண்களாக வழிபடப்பட்டவர்கள் அந்தக் குடும்பத்தினரின் குல தெய்வமாகக் கருதப்பட்டனர். வாணியர் சாதியினரில் அதிகமானவர்கள் இப்படி சீலக்காரியம்மனைக் குல தெய்வமாக வழிபட்டு வருகின்றனர். சில பிரிவினர், பத்திரகாளி, ராக்காச்சி என்ற பெண் தெய்வங்களைக் குல தெய்வமாக ஏற்று வழிபட்டு வருகின்றனர்.

சீலக்காரி வரலாறு

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தேரிக்குடியிருப்பு பகுதியிலிருந்த வாணியர் / நாடார் என்று கருதப்படுகிற குடும்பத்தைச் சேர்ந்த பத்துவயதுக்குட்பட்ட சீலக்காரி எனும் சிறுமி பிற சாதியினரால் இழைக்கப்பட்ட கொடுமைகளைத் தாங்க முடியாது தீக்குளித்தார். இந்தத் தீயில் பெண்ணின் உடல் எரிந்து விட்ட போதும், அவள் அணிந்திருந்த ஆடை, காதணிகள், பூ, வளையல் போன்ற பொருட்கள் எவ்விதச் சேதமுமின்றி இருந்தது. இதைக் கண்ட அவள் குடும்பத்தினர் அந்தப் பொருட்களை மட்டும் எடுத்து ஒரு பெட்டியில் வைத்துக் கொண்டு அந்தச் சிறுமி எரிக்கப்பட்ட இடத்திலிருந்து சிறிது மண்ணையும் எடுத்துக் கொண்டு அந்த ஊரை விட்டு வெளியேறினர். இப்படி வெளியேறிய குடும்பத்தினர் அவளுக்கென்று ஒரு கோயில் கட்டி வழிபடத் தொடங்கினர். இந்தக் கோயில் பகுதியிலிலிருந்து இடம் பெயர்ந்த குடும்பத்தினர் தங்கள் வசிப்பிடங்களில் சீலக்காரிக்கு கோயில் கட்டத் தொடங்கினர். இப்படி சீலக்காரியம்மன் கோயில் பல ஊர்களில் இவர்களின் குல தெய்வக் கோயிலாக இருந்து வருகின்றன. சீலக்காரிக்கென தனியாக சிலை எதுவுமின்றி அவள் இறந்த போது அணிந்திருந்த ஆடை, அணிகலன்களை ஒரு பெட்டியில் வைத்து அடைத்து அதையே தெய்வமாக வழிபட்டு வருகின்றனர்.

சீலக்காரியம்மனை நாடார் சமூகத்தினர் தங்களுடைய குல தெய்வமாக வழிபடுகின்றனர். சீலக்ககாரியம்மனின் முதன்மை சன்னதி தேரிக்குடியிருப்பில் கற்குவேல் ஐயனார் கோவிலில் உள்ளது. இங்கிருந்து பிடிமண்ணை எடுத்து நாடார் சமூகத்தினர் மங்களம் குரிச்சி (ஏரல் அருகில்), காத்தான்பட்டி(கமுதி அருகில்), சிவகாசி, உவரி, மற்றும் பல் ஊர்களில் கோவில்களை கட்டி வழிபாட்டு வருகின்றனர். நாடார் சமூக மக்களும் சீலக்கரியம்மன் தங்கள் இனத்தில் தோன்றி சிறுமியாக இறந்து தங்கள் குலதேய்வமாக வழிபட்டுவருவதாக வம்சா வழி கதையாக தம் மக்களுக்கு உரைத்து வருகின்றனர்.

சீலக்காரியம்மனை பிள்ளைமார் சமூகத்தினரும் தம் குலதேய்வமாக பாவித்து வழிபடுகின்றனர். தேரியில் பிள்ளைமார்களே பூசாரிகளாகவும் இருந்து வருகின்றனர்.

- தேரி என்ற செம்மண் காட்டில் வாழ்ந்த இவர்கள் ஒரே இனமாக வாழ்ந்து பிறகு காலத்தின் கட்டாயத்தால், மாறுதலால் பல இனமாக பிரிந்திருக்கக் கூடும். - செய்கின்ற தொழிலே ஒரு காலத்தில் ஜாதியாக உருவானது என்பது குறிப்பிடத்தக்கது. - தேரி என்ற இடத்தில் எள், தேங்காயை விட பனைமரங்களும் அதை சார்ந்த தொழில்களும் தான் அபரிதமாக இருந்திருக்கிறது & இருக்கிறது என்பதும் யாவரும் அறிந்த உண்மை

தாமரைக்குளம்

இப்படி இடம் பெயர்ந்து வந்த வாணியர் குடும்பத்தினரில் சின்னத்தம்பி, குப்பையாண்டி எனும் சகோதரர்கள் பெரியகுளம் மற்றும் தாமரைக்குளம் பகுதியில் தனித்தனியாக வசிக்கத் தொடங்கினர். இவர்கள் செக்குகள் மூலம் எண்ணெய் ஆட்டி விற்பனை செய்யும் தொழிலை மேற்கொண்டனர். இவர்களால் தாமரைக்குளம் ஊரில் சீலக்காரியம்மனுக்கு வழிபாடு மட்டும் நடத்தப்பட்டு வந்தது. இவர்கள் குடும்பம் விரிவடைந்த நிலையில் குடும்பத்தினர் தொழில் தேடி தேனி மாவட்டப் பகுதி முழுவதும் பரவலாகச் சென்று விட்டனர். இந்த குடும்பத்தினர் அனைவரையும் ஒருங்கிணைத்து தேனி. எஸ். மாரியப்பன் என்பவர் தற்போது தாமரைக்குளம் பகுதியில் சீலக்காரியம்மன் கோயிலைத் தனது சொந்தச் செலவில் கட்டியிருக்கிறார். இக்கோயில் சீலக்காரியம்மன் சிறுமியாக எரிக்கப்பட்ட நிலையில் அணிந்திருந்த எரியாத ஆடை, அணிகலன்கள் ஒரு பெட்டியில் வைக்கப்பட்டிருக்கின்றன. இதையே சீலக்காரியம்மன் என வழிபடுகின்றனர். கோயிலில் பத்ரகாளியம்மன் சிலைக்கு அருகில் சீலக்காரியம்மன் பெட்டி வைக்கப்பட்டு வழிபாடு செய்யப்பட்டு வருகிறது.

தினசரி பூசைகள்

இக்கோயிலில் தற்போது சீலக்காரி அம்மனுக்கும், பிற தெய்வங்களுக்கும் பூசை மற்றும் வழிபாடுகள் தினசரி செய்யப்பட்டு வருகின்றன