தாசேக் பெர்மாய் தமிழ்ப்பள்ளி, பினாங்கு

தாசேக் பெர்மாய் தமிழ்ப்பள்ளி என்பது (மலாய்: (SJK(T) Tasek Permai); ஆங்கிலம்: (Tasek Permai Tamil School); மலேசியா, பினாங்கு மாநிலத்தில், தென் செபராங் பிறை மாவட்டத்தில் சிம்பாங் அம்பாட் புறநகர்ப் பகுதியில் அமைந்து உள்ள ஒரு தமிழ்ப்பள்ளி.

தாசேக் பெர்மாய் தமிழ்ப்பள்ளி
SJK(T) Tasek Permai
அமைவிடம்
தாசேக் பெர்மாய் தமிழ்ப்பள்ளி, பினாங்கு is located in மலேசியா
தாசேக் பெர்மாய் தமிழ்ப்பள்ளி, பினாங்கு
      தாசேக் பெர்மாய் தமிழ்ப்பள்ளி
Flag of Penang.svg.png பினாங்கு,  மலேசியா
அமைவிடம்05°16′00″N 100°30′00″E / 5.26667°N 100.50000°E / 5.26667; 100.50000
தகவல்
வகைஆண்/பெண் இரு பாலர் பள்ளி
குறிக்கோள்அறிவே எல்லாம்
தொடக்கம்1946
பள்ளி மாவட்டம்சிம்பாங் அம்பாட்
கல்வி ஆணையம்மலேசியக் கல்வி அமைச்சின் பகுதி உதவி
பள்ளி இலக்கம்PBD4030
தலைமை ஆசிரியர்திருமதி. வேதவள்ளி இராமசாமி
தரங்கள்1 முதல் 6 வகுப்பு வரை
மாணவர்கள்184
கல்வி முறைமலேசியக் கல்வித்திட்டம்

மலேசிய அரசாங்கத்தால் 2003-ஆம் ஆண்டில் வியூகப் பள்ளி (வாவாசான் பள்ளி) என்று தரம் உயர்த்தப்பட்ட தமிழ்ப்பள்ளி. வியூகப் பள்ளிக் குழுமத்தில் (Kompleks Sekolah Wawasan) இந்தத் தமிழ்ப் பள்ளியும் அமைந்து உள்ளது.

2009-ஆம் ஆண்டில் இந்தப் பள்ளியில் 328 மாணவர்கள் (ஆண்கள் 151; பெண்கள் 177) கல்வி பயின்றார்கள். 23 ஆசிரியர்கள் பணியாற்றினார்கள். ஆனால் இப்போது 2020-ஆம் ஆண்டு புள்ளி விவரங்களின்படி 184 மாணவர்கள் மட்டுமே இந்தப் பள்ளியில் பயில்கிறார்கள்.[1]

வாவாசான் பள்ளி

தாசேக் பெர்மாய் தமிழ்ப்பள்ளி ஒரு வாவாசான் பள்ளியாகும். ஒரு வாவாசான் பள்ளி வளாகத்தில் மலாய்ப் பள்ளி, சீனப் பள்ளி, மற்றும் தமிழ்ப்பள்ளி என மூன்று பள்ளிகளும் ஒன்றாக அமைந்து இருக்கும். அங்கு பல்லின மாணவர்கள் ஒன்றாக இணைந்து விளையாடுவார்கள். ஒன்றாக அமர்ந்து உணவு உண்ணுவார்கள். பாடம் கற்பித்தல் மட்டும் தனித்தனியாக இருக்கும்.

வாவாசான் பள்ளியில் எல்லாச் சமூக, சமய மக்களின் உணவுகள் விற்கப்படும். சமயம், பண்பாட்டிற்கு ஏற்காத உணவுகள் இங்கு விற்கப்படுவது இல்லை.

பல்லினக் கலாச்சார நடனங்களான ஜொகெட், பரதம், கோலாட்டம், விசிறி நடனம், சிங்க நடனம் போன்ற பாரம்பரிய நடனங்கள் இந்தப் பள்ளியில் கற்றுத் தரப் படும்.[2]

தானியங்கியியல் இயந்திரவியல் போட்டி

தாசேக் பெர்மாய் தமிழ்ப்பள்ளி 2021-ஆம் ஆண்டில், மலேசியாவில் தானியங்கியியல் (Pathfinder Robotics) ரோபாட்டிக்ஸ் போட்டியை நடத்திய முதல் தமிழ் பள்ளி எனும் பெருமையைப் பெறுகிறது. பினாங்கு மாநிலத்தில் உள்ள பல தொடக்கநிலை; உயர்நிலைப் பள்ளிகள் இந்தப் போட்டியில் கலந்து கொண்டன.[3]

ஏற்கனவே 2020-ஆம் ஆண்டில் இந்தப் பள்ளி, பினாங்கு மாநிலம் நடத்திய பசுமைப் புரட்சி (Green Carnival Challenge Penang) போட்டியில் வெற்றி பெற்று உள்ளது.[4] மலேசியக் கல்வியமைச்சின் பாராட்டுதலையும் இந்தப் பள்ளி பெற்றது.

தாசேக் பெர்மாய் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் 2012, 2013-ஆம் ஆண்டுகளில் மாநில அளவில் நடைபெற்ற திடல் தடப் போட்டிகளில் பல தங்கம், வெள்ளி பதக்கங்களைப் பெற்று சாதனை படைத்து உள்ளனர்.

முன்னாள் தலைமையாசிரியர்கள்

  1. ஆறுமுகம் (1946 – 1961)
  2. மணியம் (1961 - 1980)
  3. லாரன்ஸ் (1980 - 1988)
  4. வீரசாமி அண்ணாமலை (1988 - 1995)
  5. முனுசாமி (1995 - 1997)
  6. பாண்டியன் (1997 - 2003)
  7. லெட்சுமி (2003 - 2004)
  8. விவேகனாந்தன் சுப்ரமணியம் (2004 - 2009)
  9. குணசேகரன் ஆறுமுகம் (2009 - 2010)
  10. சரோஜினி தேவி தனபாலமன் (2011 - 2013)
  11. இரத்தினவேலு (2014)

மேலும் காண்க

தாசேக் பெர்மாய் தமிழ்ப்பள்ளி மாணவர்களின் நடனம்

தாசேக் பெர்மாய் வாவாசான் பள்ளி ஆசிரியர்கள் (2018)

மேற்கோள்கள்