தவச்சிறீ சார்லஸ் விஜயரத்தினம்
தவச்சிறீ சார்லஸ் விஜயரத்தினம் , இலங்கையைச் சேர்ந்த மனித உரிமைக்கான மற்றும் பெண்கள் நல சமூக ஆர்வலர் மற்றும் பெண்கள் ஆவார். இவர் கிளிநொச்சி மாவட்ட மகளிர் அபிவிருத்தி சம்மேளனத்தின் இணை நிறுவனர் ஆவார், இந்த நிறுவனமானது, ஒரு அரச சார்பற்ற தன்மையுடன் உளவியல், சமூக ஆதரவு மற்றும் சேவை பயனர்களுக்கான சமூக ஒருங்கிணைப்பு திட்டங்களை வழங்குகிறது. மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக சமூக சேவையை வழங்கி வரும் இவர்,இலங்கையில் நன்கு அறியப்பட்டவர்[1] அக்டோபர் 2013 இல், அவர் அமைதிக்கான முன்மாதிரி விருதை வென்றார். [2]
இயற்பெயர்/ அறியும் பெயர் |
தவச்சிறீ சார்லஸ் விஜயரத்தினம் |
---|---|
பிறந்தஇடம் | கிளிநொச்சி, வட மாகாணம், இலங்கை |
பணி | சமூக ஆர்வலர் |
தேசியம் | இலங்கை |
குறிப்பிடத்தக்க விருதுகள் | N-சமாதான விருதுகள் (2013) |
சுயசரிதை
கிளிநொச்சியில் உள்ள ஒரு கிராமத்தில் பிறந்து வளர்ந்த இவரது குழந்தைப் பருவத்தில் இருந்தே இவரது குடும்பம் கடுமையான வறுமை மற்றும் பஞ்சங்களைச் சந்தித்தது மேலும் அவரது குழந்தைப் பருவத்தின் பெரும்பகுதியை இலங்கை உள்நாட்டுப் போருக்கு மத்தியில் கழித்துள்ளார். [1]
தொழில்
இலங்கையின் உள்நாட்டுப் போரினால் ஏற்பட்ட பேரழிவு மற்றும் வலியை அனுபவித்துள்ள இவர், தனது சமூகத்தில் குரல் கொடுக்க யாரும் இல்லாதவர்களுக்காகவும், கஷ்டங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்காகவும் போராடியுள்ளார். அனாதைகள் மற்றும் பின்தங்கிய குழந்தைகளுக்கு ஆரம்ப கல்வியை பயிலவும், ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளைக் கொண்ட குடும்பங்களுக்கு தகுந்த சத்துள்ள ஆகார வசதிகளை பெற்றுக்கொடுக்கவும், பிறப்புச் சான்றிதழ்கள், இறப்புச் சான்றிதழ்கள் மற்றும் நில உரிமை ஆவணங்கள் போன்ற அத்தியாவசிய சட்டப்பூர்வ ஆவணங்களைப் பெறவும் என பல்வேறு வழிகளில் அந்த சமூகங்களுக்கு உதவியுள்ளார்.
மகளிர் குழுவின் தலைவியாக இருந்த அனுபவத்தைக் கொண்டே, கிளிநொச்சி மாவட்ட மகளிர் அபிவிருத்திச் சம்மேளனத்தை உருவாக்கி, சேவைப் பாவனையாளர்களுக்கு உளவியல் ஆதரவையும் சமூக ஒருங்கிணைப்புத் திட்டங்களையும் வழங்குவதற்கு உதவியுள்ளார்.
இத்தகைய முப்பத்தி மூன்று வருட சேவைகளை அங்கீகரிக்கும் பொருட்டு 2013 ம் ஆண்டு அக்டோபர் மாதம் தாய்லாந்தின் பாங்காக்கில், ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டுத் திட்டம் (UNDP) நடத்திய N-சமாதான விருதுகள் விழாவில் பெண்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் அடிமட்ட சமூக சேவகர் என்ற தலைப்பில் விருது அளித்து கௌரவிக்கப்பட்டார். [3] [4] [2] மனிதநேயத் துறையில் முன்மாதிரி விருதை வென்ற ஒரே இலங்கையரும் இவரே. [5]
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 "Lankan wins 2013 N Peace Award – ." (in en-GB). http://www.eyesrilanka.com/2013/08/24/lankan-wins-2013-n-peace-award/.
- ↑ 2.0 2.1 "Sri Lankan Woman Receives International Peace Award | Search for Common Ground". https://www.sfcg.org/sri-lankan-woman-receives-international-peace-award/.
- ↑ "Women peace activists in Asia take center stage at UNDP gala award event - World" (in en). https://reliefweb.int/report/world/women-peace-activists-asia-take-center-stage-undp-gala-award-event.
- ↑ "100 Asian peace champions gather to honor women heroes from conflict zones" (in en) இம் மூலத்தில் இருந்து 2020-10-17 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20201017030034/https://www.asia-pacific.undp.org/content/rbap/en/home/presscenter/pressreleases/2013/10/21/n-peace-awards-2013.html.
- ↑ "Where are Sri Lanka’s role models?" (in en-US). 2020-11-21. http://www.themorning.lk/where-are-sri-lankas-role-models/.