தளபதி (திரைப்படம்)

தளபதி (Thalapathi) (1991) ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மணிரத்னம் இப்படத்தை இயக்கினார். ரஜினிகாந்த், மம்முட்டி, அரவிந்த் சாமி, ஷோபனா மற்றும் பலர் நடித்திருந்தனர்.

தளபதி
இயக்கம்மணிரத்னம்
தயாரிப்புஜி.வெங்கடேஷ்வரன்
கதைமணிரத்னம்
இசைஇளையராஜா
நடிப்புரஜினிகாந்த்
மம்முட்டி
ஷோபனா
அரவிந்த் சாமி
அம்ரீஷ் பூரி
பானுப்பிரியா
ஒளிப்பதிவுசந்தோஷ் சிவன்
படத்தொகுப்புசுரேஷ் அர்ஸ்
விநியோகம்மெட்ராஸ் டாக்கீஸ்
வெளியீடு1991
ஓட்டம்137 நிமிடங்கள்
மொழிதமிழ்

வகை

நாடகப்படம்.

கதை

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.

சிறுவயதிலேயே தாயாரால் அனாதையாக விடப்படுகின்றார் சூர்யா (ரஜினிகாந்த்). இதனைத் தொடர்ந்து ஏழைகளுடன் வாழ்க்கை நடத்தும் சூர்யா நல்ல மனிதராக உருவெடுக்கின்றார். நல்ல செயல்கள் பல செய்யும் சூர்யா ஒரு சமயம் பெண்ணொருவரைத் தாக்க முற்பட்டவனைத் தாக்கிய பொழுது அவன் இறந்துவிடுகின்றான். இதனால் சூர்யா கைது செய்யப்படுகின்றார். ஆனால் அவரை விடுதலை செய்ய ஏற்பாடு செய்கின்றார் அவ்வட்டாரத் தலைமை அதிகாரத்தினை உடையவரான தேவ்ராஜ் (மம்முட்டி). தனது குழுவில் ஒருவனையே சூர்யா கொன்றுள்ளான் என்பதனைத் தெரிந்தும் அவன் செய்த நல்ல குணத்தினால் காப்பாற்றுகின்றார். பின்னர் இருவரும் நல்ல நண்பர்களாகின்றனர். அச்சமயம் அங்கு புதியதாக பதவியேற்கும் அர்ஜூன் (அரவிந்த் சாமி) தேவ்ராஜின் குற்றச் செயல்களிற்காக அவரைக் கைது செய்ய ஏற்பாடுசெய்ய உத்தரவு பிறப்பிக்கின்றார். சூர்யா இதனை அறிந்து அர்ஜூனைக் கொல்லச் செல்கின்றார். ஆனால் அர்ஜூன் தன் சகோதரர் என அறிந்து செய்வதறியாது திகைத்து நிற்கின்றார். மேலும் அவரின் தாயாரின் கட்டளைப்படி சகோதரனான அர்ஜூனுக்கு கெடுதல் செய்யக் கூடாதென சத்தியம் செய்தவரென்பதால் அவ்வாறு நின்றார்.

பாடல்கள்

இராக்கம்மா கையத்தட்டு பாடல், பி.பி.சி. நடத்திய வாக்கெடுப்பின் படி உலகின் சிறந்த நான்காவது பாடலாக தேர்ந்தெடுக்கப்பட்டது.[1] இத்திரைப்படத்தில் அனைத்து பாடல்களையும் கவிஞர் வாலி இயற்றினார். இசையமைத்தவர் இளையராஜா ஆவார். "சின்னத் தாயவள்" திரைப்படப் பாடலில் இடம்பெறும் "சின்னத் தாயவள் பெற்ற ராசாவே" என்ற வரி இரட்டைப் பொருளைக் கொண்டுள்ளது. முதலாவதாக, இது சூர்யாவைக் (ரசினியின் கதாபாத்திரம்) குறிக்கிறது. சூர்யாவின் தாயார் இளம் வயதில் அவரைப் பெற்றதால் 'சின்னத் தாய்' என அழைக்கப்படுகிறார். இரண்டாவதாக, இசையமைப்பாளர் இளையராஜாவின் தாயாரின் பெயர் 'சின்னத்தாயி' என்பதால், இளையராஜாவையும் இவ்வரி குறிப்பிடுகிறது. பாடலாசிரியர் வாலி இவ்விரு பொருள்களும் பொருந்தும் வகையில் இப்பாடல் வரிகளை எழுதியுள்ளார்.

பாடல்கள்[2]
# பாடல்பாடகர்/கள் நீளம்
1. "யமுனை ஆற்றிலே"  மிதாலி பேனர்சி பௌமிக் 1:22
2. "அடி ராக்கம்மா கையத்தட்டு"  எஸ். பி. பாலசுப்பிரமணியம், சுவர்ணலதா 7:10
3. "சுந்தரி கண்ணால்"  எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி 7:14
4. "காட்டுக்குயிலு மனசுக்குள்ள"  கே. ஜே. யேசுதாஸ், எஸ். பி. பாலசுப்பிரமணியம் 5:32
5. "புத்தம் புது பூ"  கே. ஜே. யேசுதாஸ், எஸ். ஜானகி 5:00
6. "சின்ன தாயவள்"  எஸ். ஜானகி 3:23
7. "மார்கழிதான்"  எஸ். பி. பாலசுப்பிரமணியம், சுவர்ணலதா, குழுவினர் 2:39

துணுக்குகள்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

வார்ப்புரு:மணிரத்தினத்தின் திரைப்படங்கள்

"https://tamilar.wiki/index.php?title=தளபதி_(திரைப்படம்)&oldid=33923" இருந்து மீள்விக்கப்பட்டது