தலை எழுத்து
This article needs more links to other articles to help integrate it into the encyclopedia. (அக்டோபர் 2024) |
தலை எழுத்து (Thalai Ezhuthu) எத்திராஜ் இயக்கத்தில், 2009 ஆம் ஆண்டு வெளியான இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். ரிச்சர்ட் ராஜ் தயாரிப்பில், காட்வின் இசை அமைப்பில், 10 ஜூலை 2009 ஆம் தேதி இப்படம் வெளியானது. ரிச்சர்ட் ராஜ், பூஜா காந்தி, மீரா கிருஷ்ணன், பாலா சிங் மற்றும் பலர் நடித்துள்ளனர்.[1][2]
நடிகர்கள்
ரிச்சர்ட் ராஜ், பூஜா காந்தி, மீரா கிருஷ்ணன், பாலா சிங், பக்ரு, ராஜ் பி. கண்ணன், ஆர். ஆர். ரெட்டியார், ராகவேஷ், டேனியல் பாஸ்கர், ஸ்ரீலதா, விஜி கண்ணன், மித்ரன், முரளி மோகன், பாபு, மங்களம் குருக்கள்
கதைச்சுருக்கம்
மென்பொருள் பொறியாளரான ராஜ் (ரிச்சர்ட் ராஜ்) தன் தாயுடன் (மீரா கிருஷ்ணன்) வாழ்ந்து வருகிறான். மாற்றுத்திறனாளிகளுக்கு பயனுறும் வகையில் கருவி ஒன்றை கண்டுபிடிக்கிறான் ராஜ். அந்த கருவியை அபகரிக்க, ஊழல் அரசியல்வாதி ஒருவர் முயற்சி செய்கிறார். அந்நிலையில், பூஜாவை சந்திக்க நேரிட்டு, அவள் வசம் காதலில் விழுகிறான் ராஜ்.
பின்னர், விபத்தில் சிக்கும் ராஜால், பேச இயலாமல் போகிறது. ராஜின் அம்மாவிற்கு மாரடைப்பு ஏற்பட்டு, அவரை காப்பாற்ற ராஜிற்கு பணம் நிறைய தேவைப்படுகிறது. அப்போது, ஒரு மனநல மருத்துவ மனையில் ராஜை சேர்த்துவிட்டு, ராஜின் அந்த கருவியை திருடி, விற்க முயல்கிறாள் பூஜா.
பூஜா ஒரு மனநலம் பாதிக்கப்பட்ட பெண் என்றும், பணத்திற்காக அவள் எதுவும் செய்வாள் என்பதால், அவளை காவல் அதிகாரி கார்த்திக் (சாக்ஷி சிவா) தேடி வருகிறார். பின்னர் என்னவானது என்பதே மீதிக் கதையாகும்.
தயாரிப்பு
நியூஸிலாந்தில் உணவகம் ஒன்றை நடத்திவரும் வெளிநாடு வாழ் இந்தியரான ரிச்சர்ட் ராஜ் இப்படத்தை தயாரித்து, முக்கிய வேடத்திலும் நடித்துள்ளார். தன் உணவகத்திற்கு வந்த மாற்றுத்திறனாளி மென்பொருள் பொறியாளர் ஒருவர் இப்படம் உருவாவதற்கு உந்துதலாக அமைந்தார். படப்பிடிப்பு போபால் அருகில் நடந்தது. ரிச்சர்ட் ராஜின் தந்தை எத்திராஜ் இப்படத்தை இயக்கினார். சன் தொலைக்காட்சியில் வேலை செய்யும் டோமினிக் சாவியோ ஒளிப்பதிவு செய்தார்.[3][4][5][6][7]
ஒலிப்பதிவு
இப்படத்தின் பின்னணி மற்றும் பாடல்களின் இசையை அமைத்தவர் காட்வின் ஆவார். பிரியன் மற்றும் ஜெகன் பாடல் வரிகளை எழுதினர். 6 பாடல்களை கொண்ட ஒலித்தொகுப்பு 2009 ஆம் ஆண்டு வெளியானது.
பாடல்களின் பட்டியல்
- எத்தனையோ கனவுகள் (சோகம்)
- எத்தனையோ கனவுகள் (ஆனந்தம்)
- மெஸ்மரிசம் செய்யும்
- முதல் முறை
- ஒரு பார்வையிலே
- பருவக் காற்று
மேற்கோள்கள்
- ↑ "https://www.filmibeat.com". https://www.filmibeat.com/tamil/movies/thalaiezhuthu.html.
- ↑ "http://www.ayngaran.com". http://www.ayngaran.com/frame.php?iframepath=newsdetails.php?newsid=1389.
- ↑ "http://www.behindwoods.com/". http://www.behindwoods.com/tamil-movie-news-1/mar-09-02/thalai-ezhuthu-10-03-09.html.
- ↑ "https://www.thehindu.com". https://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/bad-boy-richie/article3021439.ece.
- ↑ "https://timesofindia.indiatimes.com". https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/Kollywoods-Kiwi-connection/articleshow/4429897.cms.
- ↑ "https://tamilwire.org". https://tamilwire.org/21135-thalaiezhuthu-meaningful-film.html.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "http://www.kollywoodtoday.net" இம் மூலத்தில் இருந்து 2021-01-19 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210119215151/http://www.kollywoodtoday.net/news/unforeseen-idea-brimmed-in-thalaiezhuthu/.