தர்மதுரை (2016 திரைப்படம்)
தர்மதுரை 2016 இல் வெளியான இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். சீனு இராமசாமி இயக்கத்தில் வெளிவந்த இப்படத்தில் விஜய் சேதுபதி முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்க, ஐஸ்வர்யா ராஜேஷ், சிருஷ்டி டங்கே, தமன்னா, கஞ்சா கறுப்பு ஆகியோர் நடித்திருந்தனர். ராதிகா சரத்குமார் படத்தில் சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். 2016 ஆம் ஆண்டில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த நான்காவது திரைப்படம் இது. பாடல்கள் மற்றும் விஜய் சேதுபதியின் நடிப்பால் ரசிகர்கள் மதிப்பில் நன்மதிப்பைப் பெற்றது. இந்தத் திரைப்படம் 64 ஆவது தேசிய திரைப்பட விருதுகள் விழாவில் வைரமுத்துவிற்கு சிறந்த பாடலுக்கான பரிசைப் பெற்றது.[2][3]
தர்மதுரை | |
---|---|
சுவரொட்டி | |
இயக்கம் | சீனு இராமசாமி |
தயாரிப்பு | ஆர். கே. சுரேஷ் |
கதை | சீனு இராமசாமி |
இசை | யுவன் சங்கர் ராஜா |
நடிப்பு | விஜய் சேதுபதி சிருஷ்டி டங்கே தமன்னா ஐஸ்வர்யா ராஜேஷ் |
ஒளிப்பதிவு | சுகுமார் (ஒளிப்பதிவாளர்) |
படத்தொகுப்பு | காசிவிசுவநாதன் |
கலையகம் | ஸ்டுடியோ 9[1] |
வெளியீடு | 19 ஆகத்து 2016 |
ஓட்டம் | 2 மணி 27 நிமிடம் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிப்பு
- விஜய் சேதுபதி - மருத்துவர் தர்மதுரை
- தமன்னா - சுபாஷினி
- ஐஸ்வர்யா ராஜேஷ் - அன்புச்செல்வி
- சிருஷ்டி டங்கே - டாக்டர் ஸ்டெல்லா
- ராதிகா சரத்குமார் - பாண்டியம்மா
- கஞ்சா கறுப்பு - கோபால்
- சௌந்தரராஜா - அர்ஜுன்
மேற்கோள்கள்
- ↑ "Vijay-Seenu team up again for Dharmadurai". The Times of India. http://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/Vijay-Seenu-team-up-again-for-Dharmadurai/articleshow/49746447.cms. பார்த்த நாள்: 20 December 2015.
- ↑ Directorate of Film Festivals(7 April 2017). "64th National Film Awards". செய்திக் குறிப்பு.
- ↑ "'Joker' and '24' sweep National honours". Top 10 Cinema. 2017-04-07 இம் மூலத்தில் இருந்து 9 April 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170409021029/https://www.top10cinema.com/article/42098/joker-and-24-sweep-national-honours.