தர்சனா ராஜேந்திரன்

தர்சனா ராஜேந்திரன் (Darshana Rajendran) ஓர் திரைப்பட நடிகை மற்றும் பாடகி ஆவார். இவர் மலையாளம் மற்றும் தமிழ் திரையுலகில் இயங்கி வருகிறார். இவர் தனது நடிப்பு வாழ்க்கையை 2014 ஆம் ஆண்டு மலையாளத் திரைப்படமான ஜான் பால் வாத்தில் துறக்குன்னு என்ற திரைப்படத்தின் மூலம் தொடங்கினார். [1]

தர்சனா ராஜேந்திரன்
இயற்பெயர்/
அறியும் பெயர்
தர்சனா ராஜேந்திரன்
பணி பாடகி, நடிகை
தேசியம் இந்தியா
செயற்பட்ட ஆண்டுகள் 2014–தற்போது வரை
செயற்பட்ட ஆண்டுகள் 2014–தற்போது வரை

திரைத்துறை

ஆஷிக் அபு இயக்கிய மாயநதி படத்தில் நடித்தார். மேலும் ஆஷிக் அபு இயக்கிய வைரஸ் (2019), ஜிஸ் ஜாய் இயக்கிய விஜய் சூப்பரும் பௌர்ணமியும் (2019), அஞ்சலி மேனன் இயக்கிய கூடே மற்றும் ராஜீவ் ரவி இயக்கிய துறைமுகம் ஆகிய திரைப்படங்களிலும் நடித்துள்ளார். தமிழில் கவண் (2017) மற்றும் இரும்புத்திரை (2018) போன்ற படங்களிலும் தர்சனா குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். [2] [3] [4] [5] [6]

கல்வி

தர்சனா தனது பள்ளிப்படிப்பை சவூதி அரேபியாவின் ரியாத்தில் உள்ள சர்வதேச இந்தியப் பள்ளியிலும், எர்ணாகுளத்தில் உள்ள கிரிகோரியன் பப்ளிக் பள்ளியிலும் முடித்தார். பள்ளிப் படிப்பிற்குப் பிறகு, டெல்லியில் உள்ள லேடி ஸ்ரீ ராம் கல்லூரியில் கணிதத்தில் பட்டம் பெற்றார். பின்னர் லண்டன் பல்கலைக்கழகத்தின் சிட்டி கல்லூரியில் நிதிப் பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

பின்னர் சென்னையில் உள்ள நிதி மேலாண்மை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் குறும்பொருளியல் துறையில் பணியாற்றினார். இந்த காலகட்டத்தில், இவர் நாடகத்தில் மிகுந்த ஆர்வத்தை வளர்த்துக் கொண்டார். மற்றும் பல ஆங்கில நாடகங்களில் நடித்தார்.

சான்றுகள்

"https://tamilar.wiki/index.php?title=தர்சனா_ராஜேந்திரன்&oldid=22892" இருந்து மீள்விக்கப்பட்டது