தருமபுரி வட்டம்

தர்மபுரி வட்டம், தமிழ்நாட்டின் தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஏழு வட்டங்களில் ஒன்றாகும்.[1] இந்த வட்டத்தின் தலைமையகமாக தர்மபுரி நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 31 வருவாய் கிராமங்கள் உள்ளன.இவ்வட்டத்தில் தர்மபுரி மற்றும் கிருஷ்ணாபுரம் என 2 உள்வட்டங்கள் உள்ளது.[2]

இவ்வட்டத்தில் தர்மபுரி ஊராட்சி ஒன்றியம் உள்ளது.

பரப்பளவு

தர்மபுரி வட்டத்தின் பரப்பளவு சுமார் 78,451 எக்டேர்களாகும்.[3] இது தர்மபுரி மாவட்டத்தின் நிலப்பரப்பில் பதினேழு சதவிகிதம்.

மக்கள் வகைப்பாடு

2011 ஆண்டின் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 4,41,148 மக்கள் தர்மபுரி வட்டத்தில் வசிக்கின்றார்கள்.[4] இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். மக்களின் சராசரி கல்வியறிவு 64% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 71%, பெண்களின் கல்வியறிவு 57% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 72.99%[5] விட குறைவானது. தர்மபுரி மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

மேற்கோள்கள்

  1. தர்மபுரி மாவட்டத்தின் வருவாய் வட்டங்கள்
  2. "நல்லம்பள்ளி வட்டம் உருவாக்கம் - அரசாணை" (PDF). Archived from the original (PDF) on 2016-04-07. பார்க்கப்பட்ட நாள் 20 சூன் 2016.
  3. "தர்மபுரி மாவட்ட இணையதளம்". Archived from the original on 2011-04-14. பார்க்கப்பட்ட நாள் 14 ஆகத்து 2014.
  4. "2011-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". பார்க்கப்பட்ட நாள் 14 ஆகத்து 2014.
  5. "இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011 - கல்வியறிவு". பார்க்கப்பட்ட நாள் 14 ஆகத்து 2014.
"https://tamilar.wiki/index.php?title=தருமபுரி_வட்டம்&oldid=127237" இருந்து மீள்விக்கப்பட்டது