தம்பையா ஏகாம்பரம்
தம்பையா ஏகாம்பரம் (Thambiah Ehambaram, 12 அக்டோபர் 1913.[1] – 22 மார்ச் 1961) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும், திருகோணமலை நகரசபைத் தலைவரும் ஆவார்.[2]
ரி. ஏகாம்பரம் T. Ehambaram | |
---|---|
இலங்கை நாடாளுமன்றம் for மூதூர் | |
பதவியில் 1960 – 22 மார்ச் 1961 | |
முன்னையவர் | எம். ஈ. எச். முகம்மது அலி |
பின்னவர் | எம். ஈ. எச். முகம்மது அலி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 12 அக்டோபர் 1913 |
இறப்பு | மார்ச்சு 22, 1961 | (அகவை 47)
அரசியல் கட்சி | இலங்கைத் தமிழரசுக் கட்சி |
இனம் | இலங்கைத் தமிழர் |
திருகோணமலை நகரசபையில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக உறுப்பினராகப் பணியாற்றிய ஏகாம்பரம் பல ஆண்டுகள் நகரசபைத் தலைவராகவும் இருந்துள்ளார். இவர் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் மூதூர் இரட்டை-உறுப்பினர் தொகுதியில் மார்ச் 1960 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு அத்தொகுதியின் முதலாவது உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டு நாடாளுமன்றம் சென்றார்.[3] சூலை 1960 தேர்தலில் இவர் மீண்டும் முதலாவது உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார்.[4] இவர் பதவியில் இருக்கும் போதே 1961 மார்ச் 22 இல் காலமானார்.[5]
தேர்தல் வரலாறு
தேர்தல் | தொகுதி | கட்சி | வாக்குகள் | முடிவு |
---|---|---|---|---|
1960 மார்ச் நாடாளுமன்றம் | மூதூர் | இதக | [3] | தேர்வு |
1960 சூலை நாடாளுமன்றம் | மூதூர் | இதக | [4] | தேர்வு |
மறைவு
1961 மார்ச் 22 அன்று திருகோணமலை கச்சேரி வாயிலில் நடைபெற்ற சத்தியாக்கிரக இயக்கத்தில் கலந்து கொண்டு வீடு திரும்பிய ஏகாம்பரம் அவரது வீட்டிலேயே திடீரென மாரடைப்பு ஏற்பட்டுத் தனது 47-வது அகவையில் காலமானார்.[2]
மேற்கோள்கள்
- ↑ "Ahambaram, Thambiah". இலங்கை நாடாளுமன்றம். http://www.parliament.lk/en/members-of-parliament/directory-of-past-members/viewMember/2039.
- ↑ 2.0 2.1 "மூதூர் எம்.பி. திடீர் மரணம்". யாழ்ப்பாணம்: ஈழநாடு. 23 மார்ச் 1961.
- ↑ 3.0 3.1 "Result of Parliamentary General Election 1960-03-19". இலங்கை தேர்தல் திணைக்களம் இம் மூலத்தில் இருந்து 2009-12-09 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20091209231748/http://www.slelections.gov.lk/pdf/Results_1960_03_19%20GENERAL%20ELECTION.PDF.
- ↑ 4.0 4.1 "Result of Parliamentary General Election 1960-07-20". இலங்கைத் தேர்தல் திணைக்களம் இம் மூலத்தில் இருந்து 2015-09-24 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150924115611/http://www.slelections.gov.lk/pdf/Results_1960_07_20%20GENERAL%20ELECTION.PDF.
- ↑ டி. பி. எஸ். ஜெயராஜ் (15 சூலை 1997). ""Golden Lord" A Thangathurai: An Eastern Man for All Seasons!". Tamil Times XVI (7): 15-21. பன்னாட்டுத் தர தொடர் எண்:0266-4488. http://www.noolaham.org/wiki/index.php?title=Tamil_Times_1997.07. பார்த்த நாள்: 2015-02-06.