தம்பலகாமம்
தம்பலகாமம் (Thampalakamam) இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு விவசாயக் கிராமம் ஆகும். கொழும்பிலிருந்து திருகோணமலை செல்லும் நெடுஞ்சாலையில் கந்தளாய் மற்றும் திருகோணமலை நகர்களினிடையில் திருகோணமலையில் இருந்து 22 கிமீ தொலைவில் இது அமைந்துள்ளது.[1][2][3]
தம்பலகாமம் | |
---|---|
நகரம் | |
ஆதிகோணேச்சரம் | |
ஆள்கூறுகள்: 8°31′0″N 81°5′0″E / 8.51667°N 81.08333°E | |
நாடு | இலங்கை |
மாகாணம் | கிழக்கு |
மாவட்டம் | திருகோணமலை |
பி.செ. பிரிவு | தம்பலகாமம் |
கோயில்கள் - ஆதிகோணேசராலயம்
இங்கு ஆதிகோணேச்சரம் எனும் பெயரில் ஒரு சிவன் ஆலயம் உள்ளது. இந்த ஆலயம் சம்பந்தரால் பாடல் பெற்ற திருக்கோணேச்சரம் ஆலயத்தின் வரலாற்றுடன் தொடர்புடையது.
ஒல்லாந்தர் திருக்கோணேச்சரம் ஆலயத்தை அழித்த போது சில நலன் விரும்பிகள் ஆலயத்தில் இருந்த சில விக்கிரகங்களை அகற்றி தம்பலகாமத்தில் பாதுகாத்தனர். பிற்காலத்தில் பாதுகாத்த விக்கிரகங்களைக் கொண்டு ஆதி கோணேஸ்வரம் ஆலயத்தை அமைத்தனர்.
தம்பலகாமம் முத்துமாரியம்மன் கோவில்
முத்துமாரியம்மன் கோயில் தம்பலகமத்தில் கள்ளிமேடு, சம்மாந்துறையில் அமைந்துள்ளது.
விவசாயம்
கந்தளாய் குளத்தில் இருந்து பெறும் நீர் மூலம் இங்கு விவசாய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றது. நெல் பெரும்படியாக இங்கே விவசாயம் செய்யப்படுகின்றது.