தமிழ்நாடன்

தமிழ்நாடன், (பிறப்பு: 09 சூலை 1941 - இறப்பு: 09 நவம்பர் 2013), சேலம் இருசாயி (எ) கமலபூபதி – ஆறுமுகம் இணையருக்கு பிறந்த இவரின் இயற்பெயர் சுப்பிரமணியன். சிறந்த தமிழ் மொழி பெயர்ப்பு நூலுக்கான சாகித்திய அகாதமியின் விருது பெற்றவர்.[1][2]

தமிழ்நாடன்
தமிழ்நாடன்
இயற்பெயர்/
அறியும் பெயர்
தமிழ்நாடன்
பிறந்ததிகதி 09 சூலை 1941
இறப்பு 09 நவம்பர் 2013

கல்வி

தொடக்கப் பள்ளிக் கல்வி, உயர்நிலைப் பள்ளிக் கல்வி மற்றும் கல்லூரிக் கல்வியை சேலத்தில் படித்தவர். 1962ஆம் ஆண்டில் ஆசிரியர் பயிற்சி முடித்தவர்.

குடும்பம்

1968ஆம் ஆண்டில் கலைவாணியை மணந்து ஒரு மகன் மற்றும் மகளுக்கு தந்தையானர். 1972ஆம் ஆண்டில் புதுக்கவிதைக்கான வானம்பாடிக் கவிஞராக அறிமுகம் ஆனார்.

ஆசிரியர் பணி

17 செப்டம்பர் 1964இல் சேலத்தில் தமிழ் ஆசிரியர் பணியில் இணைந்தவர். பின் பள்ளித் தலைமை ஆசிரியாராகப் பணி புரிந்து ஓய்வு பெற்றவர். இந்திய நடுவண் அரசின் நல்லாசிரியர் விருதை பெற்றவர்.

பன்முகத்தோற்றங்கள்

பள்ளி ஆசிரியராக அறிமுகமாகி பின் எழுத்தாளராக, ஓவியராக, கவிஞராக, தொல்லியல் களப்பணியாளராக பன்முகத் தன்மையுடன் தமிழுலகில் அறியப்பட்டவர். பன்னாட்டார் பட்டயம் எனும் செப்பேடு கண்டறிந்து பதிப்பித்தவர். கர்னல் ரீடு அறிக்கையை (கி.பி. 1800) முதன் முதலாக முழுவடிவத்தில் வெளியிட்டவர்.

விருதுகள்

  1. இந்திய அரசின் ஆசிரியர்களுக்கான தேசிய விருது
  2. தமிழ்நாடு அரசின் பாரதிதாசன் விருது
  3. கவிஞர் சிற்பி அறக்கட்டளை இலக்கிய விருது
  4. ஒடியா மொழி சிறுகதைகள் நூல் மொழி பெயர்ப்பிற்காக சாகித்திய அகாதமியின் விருது, ஆண்டு 1999

படைத்த நூல்கள்

  1. தமிழ்மொழியின் முதல் அச்சுப் புத்தகம் (1995, 1997, 2010)
  2. பரமத்தி அப்பாவு (1800இல் வெள்ளையரை எதிர்த்த வீரைய்யன் வரலாறு)
  3. சேலம் : கலையும் இலக்கியமும் (1995)
  4. சேலம் திருமணி முத்தாறு (2006, 2010)
  5. கொங்கு நாட்டில் கும்பினி ஆட்சி, புதுமலர், ஈரோடு (2009)
  6. சேலம் மையப்புள்ளி 2010

தொகுத்த நூல்கள்

  1. South Indian Studies (1981)
  2. சேலம் மாவட்டம்: சில ஆய்வுகள் (1988)
  3. தருமபுரி மாவட்டம்:புதிய ஆய்வுகள் (1996)
  4. தமிழ்நாட்டு மலைவாழ் பழங்குடி மக்கள் (1996)
  5. தாரமங்கலம் கெட்டி முதலி அரசர்கள் (1996)
  6. கொங்குக் களஞ்சியம் ( 2008)

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=தமிழ்நாடன்&oldid=4376" இருந்து மீள்விக்கப்பட்டது