தமிழ்செல்வனும் தனியார் அஞ்சலும்

2016ஆம் ஆண்டில் இயக்குனர் கவுதம் மேனன் தயாரிப்பில் வெளிவந்த தமிழ்செல்வனும் தனியார் அஞ்சலும் என்கிற திரைப்படத்தை பிரேம்சாய் இயக்கியுள்ளார்[1]. இப்படத்தில் நடிகர் ஜெய் மற்றும் நடிகை யாமி கெளதம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நடிகர்கள் அஷுடோஷ் ரானா, சந்தானம், விடிவி கணேஷ், பிரேம், நாசர், தம்பி ராமையா, சத்ய கிருஷ்ணன் மற்றும் தளபதி தினேஷ் ஆகியோர் துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தில் பிண்ணணி பாடகர் கார்த்திக் இசையமைத்துள்ளார். இப்படம் தெலுங்கில் 'கொரியர் பாய் கல்யாண்'(Courier Boy Kalyan) என்கிற தலைப்பில் செப்டம்பர் 2015ஆம் ஆண்டில் திரையிடப்பட்டது. இப்படம் 2012ஆம் ஆண்டில் தயாரிப்பில் தொடங்கி ஆகஸ்டு 5, 2016ல் திரையிடப்பட்டது[2].

தமிழ்செல்வனும் தனியார் அஞ்சலும்
இயக்கம்பிரேம்சாய்
கதைபிரேம்சாய்
இசைகார்த்திக்
நடிப்புஜெய்
யாமி கெளதம்
சந்தானம்
விடிவி கணேஷ்
ஒளிப்பதிவுஓம் பிரகாஷ்
படத்தொகுப்புபிரவீன் அந்தோனி
விநியோகம்கஸ்தூரி பிலிம்
வெளியீடுஆகஸ்டு 5, 2016
ஓட்டம்102 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

ஒலிப்பதிவு

இப்படத்தில் பிண்ணணி பாடகர் கார்த்திக் இசையமைத்துள்ளார். பாடலாசிரியர்கள் நா.முத்துகுமார், மதன் கார்க்கி மற்றும் விவேகா பாடல்களை இயற்றியுள்ளனர். இப்படத்தில் மூன்று பாடல்கள் உள்ளன.

தயாரிப்பு

இப்படத்தின் இயக்குனர் பிரேம்சாய் நடிகரும் இயக்குனருமான பிரபுதேவாவின் உதவியாளராவார். இது இவரின் முதல் திரைப்பட்மாகும்.. நடிகர் ஜெய் ஒரு தனியார் அஞ்சலில் பணிபுரிவதாகவும், நடிகை யாமி கெளதம் ஒரு துணிக்கடையில் விற்பனை பெண்ணாக பணிபுரிவதாகவும் இக்கதை அமைக்கப்பட்டது[3]. முன்னதாக நடிகை ரிச்சா கங்கோபாத்யாய் இப்படத்தின் கதாநாயகியாக நடிக்க[4] திட்டமிடப்பட்ட நிலையில் தான் இனி திரைப்படங்களில் நடிக்கப்போவதில்லை என்று தெரிவித்த பின்னர் நடிகை யாமி கெளதம் கதாநாயகியாக நடிக்க திட்டமிடப்பட்டது. ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ் மற்றும் கலை இயக்குனர் ராஜீவன் ஆகியோர் இப்படத்தில் முக்கிய பங்களித்துள்ளனர். தயாரிப்பு நிதி பற்றாக்குறை காரணமாக இப்படமெடுக்க காலதாமதமானது.

சான்றுகள்