தமிழிச்சி (திரைப்படம்)

தமிழிச்சி திரைப்படம் கனடா வாழ் ஈழத் தமிழர்களின் தயாரிப்பில் பல்வேறு நாடுகளிலும் திரையிடப்பட்ட தமிழ்த் திரைப்படமாகும்.புலம்பெயர் ஈழத்து இளம் சமூகத்தினரிடையே தொடரும் மோதல்களினை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் இத்திரைப்படத்தில் ஈழத் தமிழ்க்கலைஞர்கள் பலரும் நடித்துள்ளது சிறப்பாகும். சுதன்,சஞ்சீவ் குமார், சசிகலா பி. எஸ். சுதாகர், சுப்புலட்சுமி காசிநாதன் முதலானோர் நடித்துள்ள இந்தத்திரைப்படத்தின் இயக்கம், படப்பிடிப்பு, தொகுப்பு ஆகிய பொறுப்புகளை தயாரிப்பாளரான இந்திரசித்து ஏற்றுள்ளார்.

தமிழிச்சி
இயக்கம்இந்திரசித்து
தயாரிப்புசித்ரா புரொடக்ஷ்ன்ஸ்
கதைநேசன்
நடிப்புசுதன்,
சசிகலா
சஞ்சீவ் குமார்,
பி. எஸ். சுதாகர்,
கணபதி.ரவீந்திரன்,
ரூபி யோகதாசன்,
சுப்புலட்சுமி காசிநாதன்,
புலவர். சிவானந்தன்
மணிமாறன்,
தர்ஷினி
தரன்
சிவனேசன்
ஒளிப்பதிவுஇந்திரசித்து
படத்தொகுப்புஇந்திரசித்து
வெளியீடு2005
நாடுகனடா
மொழிதமிழ்

கதை

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.

தன் அண்ணனோடும் (சுதாகர்), அண்ணியோடும் (தர்சினி) நெருக்கமான உறவு இல்லாமல் நண்பர்களுடன் கும்மாளம் அடித்துத் திரியும் ஒரு இளைஞன் (சுதன்), அவனுக்குப் பின்னால் ஒரு இளைஞர் குழு. அன்பான அக்கா (ரூபி), பொறுமை இழக்கும் அத்தான் (ரவீந்திரன்) - இவர்களை மதிக்காமலே தன் பரிவாரங்களுடன் திரியும் இன்னுமொரு இளஞன் (சஞ்சீவ் குமார்). இந்த இரண்டு குழுக்களிடையே வலுவான காரணம் எதுவும் இல்லாமலே சண்டை முளைக்கிறது. துரத்தி, துரத்தி மோதிக் கொள்கிறார்கள். தன் காதலியின்(சசி) வற்புறுத்தலினால் முதல் இளைஞன் வன்முறைகளை கைவிட்டு வேலை தேடிக்கொண்டு வாழ்க்கையை ஒழுங்காக நடத்தும் போது, மற்றக் குழுவினர் அவனைக் கொல்ல முற்படுகின்றனர். அவர்களை பிடித்துக் கொடுத்து மீண்டும் வன்முறையை தொடரக் கூடாது என்பதற்காக அவன் பொலிசாருக்கு உண்மையைச் சொல்ல மறுக்கிறான். ஆனல் அவனது நண்பர்கள் பொலிஸுக்கு எல்லாவற்ரையும் சொல்ல, கொலைமுயற்சியில் சம்பந்தப்பட்ட மற்ற இளஞனும், அவனது நண்பனும் நாடு கடத்தப்படுகின்றார்கள்.

குறிப்பு

ஐரோப்பாவில் பல நாடுகளிலும், அவுஸ்திரேலியாவிலும் தமிழிச்சி திரையிடப்பட்டிருக்கிறது.

வெளி இணப்புக்கள்

சலனம் வலைத்தளத்தில் விமர்சனம்

"https://tamilar.wiki/index.php?title=தமிழிச்சி_(திரைப்படம்)&oldid=27204" இருந்து மீள்விக்கப்பட்டது